பச்சையம்
paccaiyam
'குளோரஃபில்’ என்று கூறப்படும் பச்சையம், தாவரங்கள் பச்சையாக இருப்பதற்கு மட்டுமின்றி பசுமையாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது.
'குளோரஃபில்’ என்று கூறப்படும் பச்சையம், தாவரங்கள் பச்சையாக இருப்பதற்கு மட்டுமின்றி பசுமையாக இருப்பதற்கும் காரணமாக உள்ளது. காளான் போன்ற ஒட்டுண்ணித் தாவரங்களைத் தவிர்த்துப் பிற எல்லா தாவரங்களிலும் பச்சையம் உண்டு.
தாவர இலைகளின் அடிப்பகுதியில் சிறுசிறு துவாரங்கள் உண்டு. இவை கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகச் சிறிய நுண்துளைகளாகும். இத்துளைகள் வழியாகக் காற்று
உள்ளே நுழைகிறது. இலைகளில் உள்ள பச்சையம் காற்றிலுள்ள கரியமில வாயுவைப் பிரித்தெடுக்கிறது. வேரிலிருந்து வரும் நீருடன் இக் கரியமிலவாயு கலந்து புதுக் கலவையாகிறது. இக்கலவை சூரிய ஒளியின் உதவியால் வேதியியல் முறையில் மாற்றமடைந்து சர்க்கரைப் பொருளாகவும் மாவுப் பொருளாகவும் மாற்ற முடிகிறது. இச்செயலே 'ஒளிச் சேர்க்கை' ஆகும். இவ்வாறு தாவரங்களிலுள்ள பச்சையம் ஒளிச்சேர்க்கைக்கான அடிப்படைப் பொருளாக அமைந்துள்ளது.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 209)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jgapsqw/
தமிழ்“பச்சையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3jgapsqw/APA
Oliyon Research. (2026). பச்சையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jgapsqw/MLA
"பச்சையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3jgapsqw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment