இரான்
irāṉ
மத்தியபிரதேசத்தில் சாகர் (Sagar) மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர்.
மத்தியபிரதேசத்தில் சாகர் (Sagar) மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இவ்வூர் பைனா (Bina) என்னும் துணை ஆறு, பேட்வா (Betwa) என்னும் ஆற்றுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. தொல்லியல் சிறப்புப் பெற்ற இவ்வூர் பழங்காலத்தில் அயிராகினா (Airakina) என்று கூறப்பட்டது. இங்குக் குப்தர் காலத்தைச் சேர்ந்த கோயில்கள் பல உள்ளன. அலெக்சாந்தர் கன்னிங்காம் கி.பி. 1874–75–ஆம் ஆண்டு இவ்வூரில் களஆய்வுகளை மேற்கொண்டு இவ்வூரின் பழைமைச் சிறப்பினை வெளிக் கொணர்ந்தார். அவரே அயிராகினா என்று சொல்லப்படுகிற தொன்மையான ஊர் இதுவேயாகும் எனக் குறிப்பிட்டார்.
இரானில் (Eran) 1960–61–ஆம் ஆண்டு சாகர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் கே.டி. பாசுபாய் (K.D. Bajpai), உதயவீர்சிங்கு (Udai VirSingh) ஆகியோர் தலைமையில் அகிழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வின் மூலம் இவ்வூரில் நான்கு பண்பாட்டுக்கால மக்கள் வாழ்ந்தமை பற்றிய அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன. வெண்மை ஓவியம் தீட்டப்பட்ட கருப்பு, சிவப்பு மட்பாண்டங்களும், சிவப்பு மட்பாண்டங்களும் இரும்புப் பொருட்களும் அகழாய்வில் கிடைத்தன.
கிழக்கு மாளவப் பகுதியை ஆட்சி புரிந்த இந்திர குப்தன் என்ற அரசருடைய எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஈயத்தகடு ஒன்று இரண்டாம் பண்பாட்டுக் கால மண்ணடுக்கில் கிடைத்தது. மௌரியப் பேரரசர் அசோகர் ஆட்சிக்குப்பின் இது, தர்மபாலர், இந்திர குப்தன் போன்றோரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக விளங்கியது. மூன்றாம் பண்பாட்டுக்கால மண்ணடுக்குகளில் இராமகுப்தரின் துளையிடப்பட்ட நாணயங்கள் பல கிடைத்தன. மேலும் நாகர்கள், இந்தோசசானிய நாணயங்கள் பலவும் இவ்வூரில் கிடைத்தன. இராமகுப்தரின் கருடன் வகை நாணயங்கள், இவ்வூரில் மட்டுமே கிடைத்துள்ளன. கசலட்சுமி (Gaja Lakshmi) உருவமும் எழுத்தும் பொறிக்கப்பட்ட முத்திரை ஒன்றும் இங்குக் கிடைத்தது. இம்முத்திரையில் ‘அயிராகினா’ என்ற நகரத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஊண அரசர் தோரமானரின் (Toramana) கல்வெட்டுகளும் இந்தோசசானிய நாணயங்கள் பலவும் இவ்வூரில் கிடைத்தமையால், இப்பகுதி ஊணர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்தது என்பதனை அறியமுடிகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 172)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3jbvnrrr/
தமிழ்“இரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3jbvnrrr/APA
Oliyon Research. (2026). இரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3jbvnrrr/MLA
"இரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3jbvnrrr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment