உலகின் மிக உயரமான எவரசுடு மலையின் சிகரத்தை முதன் முதல் அடைந்த இருவருள் ஒருவர் ஆவார். இவருடன் எவரசுட்டை அடைந்த மற்றவர் தென்சிங்கு நார்கே என்னும் நேபாள நாட்டினர் ஆவார். இல்லரி எட்மண்டு (Hillary Edmund) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1953-ஆம் ஆண்டு மே திங்கள் 29–ஆம் நாள் தென்சிங்கு நார்கேயுடன் எவரசுட்டுச் சிகரத்தில் அடியெடுத்து வைத்தார். இல்லரி நியுசிலாந்து அண்டார்டிகா பயணத்திற்கு இவர் 1958–ஆம் ஆண்டு தலைமை தாங்கினார். தம்முடன் பயணம் செய்த தென்சிங்கு என்னும் சேர்பா (Sherpa) மலைவாசியின் மீது மிகுந்த அன்பும் ஈடுபாடும் கொண்டு, சேர்பா மலைவாசிகளுக்கென மருத்துவ விடுதிகள் பயிற்சிப்பள்ளிகள், மலைச்சரிவுப்பாலங்கள் போன்றவற்றை உருவாக்கினார். மலைமீது ஏறுபவர்களுக்குப் பயிற்சி தரும் பள்ளிகளில் தம் அனுபவங்களை எடுத்துரைத்து, அந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார்.