சாட்டன்—பௌமான் வினை
cāṭṭaṉ—paumāṉ viṉai
ஓரிணைய, ஈரிணைய அமீன்கள், ஃபீனால்கள், ஆல்கஹால்கள் போன்றவை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் பென்சாயில் குளோரைடுடன் வினைப்படுவதைச் சாட்டன் பௌமான் வினை (Schotten Baumann reaction) என்பர்.
ஓரிணைய, ஈரிணைய அமீன்கள், ஃபீனால்கள், ஆல்கஹால்கள் போன்றவை நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையில் பென்சாயில் குளோரைடுடன் வினைப்படுவதைச் சாட்டன் பௌமான் வினை (Schotten Baumann reaction) என்பர். இவ்வினை பென்சாயிலேற்றம் என்றும் குறிக்கப்படும். மேற்சொன்ன பற்பல ஹைட்ராக்சி மற்றும் அமினோ சேர்மங்களை அவை அரோமாட்டிக் அல்லது அலிஃபாட்டிக் சேர்மங்களாக இருப்பினும், இம்முறையில் பென்சாயிலேற்றம் செய்யலாம். சேர்மத்தைப் பென்சாயில் குளோரைடுடன் சேர்த்துக் காரத்தின் முன்னிலையில் நன்கு குலுக்கி எடுத்தால் இவ்வினை நிகழும். CH{[sub|5COX + HO → CHCOOH + HX CHCOX + HOR →RCOOR + HX CHCOX + NH →RCONH + HX
பென்சாயில் குளோரைடு, நீரிலும் நீர்த்த சோடியம் ஹைட்ராக்சைடு முன்னிலையிலும் மிகத் தாமதமாகவே சிதைவுறும். எனவே ஓரிணைய, ஈரிணைய அமீன்கள், ஃபீனால்கள், ஆல்கஹால்கள் இவற்றிலுள்ள வீரிய ஹைட்ரஜன் அணு நீக்கப் பெற்று, கருக் சுவர் பதிலீட்டு வினையின் (nucleophilic substitution) மூலம் இவ்வினை நிகழும். பொதுவாக அசைல்ஹாலைடுகளும், ஆல்கஹால்களும் வினை புரிந்து எஸ்ட்டர்களை உருவாக்கும். வேறு வினைத் தொகுதிகளில் குறுக்கிடுதல் எதுவும் இல்லையாதலால், இவ்வினை மேற்சொன்ன வினைத் தொகுதிகளைக் கரிமப் பண்பறிப் பகுப்பாய்வினால் கண்டறியப் பயன்படும்.
பென்சாயில் பெறுதிகள் படிக வடிவமுள்ளவை. இவற்றுக்குத் திட்டமான உருகு நிலையுண்டு. கார்போனைல் கார்பன், எலெக்ட்ரான் அடர்த்தி குறைந்த மையமாகத் திகழ்வதால், அலிஃபாட்டிக் அமில குளோரைடுகளுடன் (எலெக்ட்ரான் ஈனிகளுடன்) மிகு வீரியமாகச் செயல்படும். பென்சனிலைடு (CHNHCOCH), கிளைக்கால் டைபென்சோயேட் ((CH)(COOCH)), மெத்தில் 3.5- டை நைட்ரோ பென்சோயேட் (CH (NO)COOCH) ஆகியன பென்சாயில் பெறுதிகளுக்கு எடுத்துக்காட்டுகள்.
—டி. சுகுமார்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 40)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gctjweq/
தமிழ்“சாட்டன்—பௌமான் வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3gctjweq/APA
Oliyon Research. (2026). சாட்டன்—பௌமான் வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3gctjweq/MLA
"சாட்டன்—பௌமான் வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3gctjweq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment