அரையசு
araiyacu
கிறித்தவ சமய குருமார்களுள் ஒருவர்.
கிறித்தவ சமய குருமார்களுள் ஒருவர். இவருடைய பழங்காலக் கிறித்தவ சமயக் கருத்துகள் அரையனிசம் (Arianism) எனக் கூறப்பட்டன. இவரது கொள்கை திரித்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. திரித்துவம் (Trinity) என்பது, இறைவனைத் தந்தையாகவும் (God the Father), தேவ குமாரனாகவும் (The Son of God) பரிசுத்த ஆவியாகவும் (Holy Spirit) ஒரே தன்மையில் வெளிப்படுத்துவதாகும். பழங்கால மக்களும் இக்கருத்தை நம்பினர். திகாசியா (Nicacia) மன்றம் அரையசுவின் கருத்துகளைப் பற்றி ஆராய்ந்தது. இயேசு இறைவனின் உயர்ந்த நிலையினின்று வேறுபட்டு இருந்தாலும், தொழுகைக்குரிய இறைவன் என்பது அரையசின் (Arius) கூற்று.
இயேசுவும் அறக் குறைபாடுகளுக்குட்பட்டவர் என அரையசு கி.மு. 318–ஆம் ஆண்டுக் கூறியதனால் அக்கூற்று, கிறித்தவ சமயத்திற்கு எதிரானது என அலெக்சாண்டர் கருதி, இவரைக் கிறித்தவ சமயத்தினின்று விலக்க ஆணையிட்டார்.
ஆனால் அரையசு தம் கொள்கைகளை மக்கள் கவரும் வகையில் பரப்பிக் கிறித்தவ மக்களுள் சிலரைத் தம் வயப்படுத்தினார். உரோமானியப் பேரரசை, கி.மு. 325–இல் ஆண்ட கான்சுடன்டைன் என்பவர் கூட்டிய நிக்ககர் (Nicacar) என்ற அவையானது, அரையசின் கொள்கைகள் தவறானவை என முடிவு செய்தது. ‘தேவகுமாரன்’ முழுமையான தெய்விகத் தன்மை படைத்தவர் என்றும், அதனால் அக்குமாரன் தந்தைக்கு ஒப்பானவர் என்றும் அது அறிக்கை வெளியிட்டது. அரையசு கி.மு. 335–இல் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 833)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3gcew2jb/
தமிழ்“அரையசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3gcew2jb/APA
Oliyon Research. (2026). அரையசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3gcew2jb/MLA
"அரையசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3gcew2jb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment