சூல் காலத் தொற்று நோய்கள்
cūl kālat toṟṟu nōykaḷ
கருக் காலத்தின் போது, குறிப்பிடத் தக்க நோய் எதுவும் ஏற்படுவதில்லை.
கருக் காலத்தின் போது, குறிப்பிடத் தக்க நோய் எதுவும் ஏற்படுவதில்லை. பிற பெண்களைப் பாதிக்கும் எந்தத் தொற்று நோயும் சூலியைத் தாக்கக் கூடும்.
ஜெர்மன் தட்டம்மை என்னும் நோய் முதல் மூன்று மாதங்களுக்குள் உண்டானால், குழந்தைக்கு ஊனம் உண்டாகலாம். இந்தியா போன்ற நாடுகளில் குலுடையவருக்குக் காச நோய் உண்டாகலாம். போதிய மருத்துவம் அளிக்கா விடில், பிறக்கும் குழந்தை காச நோயுடன் பிறந்து இறக்கலாம் அல்லது இறந்து பிறக்கலாம். மேலும் தாயின் காச நோய்க்காகக் கொடுக்கப்படும் ஸ்ட்ரெப்டோமைசீன் மருந்து கருப் பைக் குழந்தைக்குச் செவிட்டுத் தன்மையை உண்டாக்கலாம்.
கணவனுக்கு உண்டாகும் பால் வினை நோய்கள் (மேக நோய், வெட்டை நோய், சாங்ராய்டு) சூலிக்கும் கடத்தப்படலாம். டிரைகோமோனஸ், பேன், சிரங்கு, ஹெர்பீஸ் நோய், கழலைகள் ஆகியன பெண்ணின் பிறப்பு உறுப்புகளைப் பாதிக்கலாம். இவற்றில் பல, பிறக்கப் போகும் குழந்தைக்கு உண்டாகும் வாய்ப்புள்ளமையால், தாய்க்கும் முழுமையாக மருத்துவம் அளிக்க வேண்டும். இல்லையெனில், பிறவி ஊனங்கள் உண்டாகலாம்.
இன்ஃபுளுயென்சா. மலேரியா, டாக்சோபிளாஸ்மோசிஸ் போன்ற நோய்களும் சூல் காலத்தில் சிக்கல்களை உண்டாக்கிக் கருச் சிதைவை ஏற்படுத்தலாம். —அ. கதிரேசன் நூலோதி. M.G.R. Hull et.al.,Obstetrics and Gynaecology, First Edition, John Wright and Sons, Bristol, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 662)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3em9rypf/
தமிழ்“சூல் காலத் தொற்று நோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3em9rypf/APA
Oliyon Research. (2026). சூல் காலத் தொற்று நோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3em9rypf/MLA
"சூல் காலத் தொற்று நோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3em9rypf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment