தொண்டை நாட்டிலுள்ள, தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று. திருவிற்கோலம் எனப்படும் கூவளத்திற்கு அருகில் உள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வழியாகக் கூவளத்திற்குச் சென்று. கூவம் ஏரிக்கரை வழி நடந்து சென்று இத்தலத்தினை அடையலாம். ஏரியில் நீரில்லாதபோது ஏரியினுள்ளே குறுக்காக நடந்து சென்றடையலாம். இப்பொழுது இவ்வூரில் கிறித்தவ மக்கள் மிக்குள்ளனர். திருக்கோயிலுக்கு எதிரே குளம் உள்ளது. இத்தவம் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்றது. இத்தலத்தினை இவர், ‘இருமலர்த்தண் பொய்கை இலம்பையங்கோட்டூர்’ என்று குறிப்பிட்டுள்ளார். இறைவன் பெயர் சந்திரசேசுரர்; இறைவி பெயர் கோடேந்து முலையம்மை. இது அரம்பையர் வழிபட்ட தலம் எனக் கூறப்படுகிறது.