உத்தண்ட வேலாயுதபாரதி
uttaṇṭa vēlāyutapārati
கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.
கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். திருவதிகை எனப்படும் சிவத்தலத்தில் வாழ்ந்து வந்தவர் என்பதனை அவ்வூர்த் திருக்கோயில் மதிலிற் பொறிக்கப்பட்டுள்ள கல்வொட்டொன்றால் அறிய முடிகிறது. இப்புலவர் தொண்டை நாட்டினைச் சேர்ந்த காலியூர்க் கோட்டத்துத் தனியூரான உத்தர மேரூரைச் சார்ந்த மகிபால குலகாலச்சேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்தணர் குலத்தினைச் சேர்ந்த இவருடைய தந்தையார் பெயர் தேவராசப் பட்டர் என்பதாகும். இவர் கௌடிலிய கோத்திரத்தில் தோன்றியவர். இப்புலவர் உத்தண்ட வேலாயுத கவி, வீரவல்லி தேவராசன், காசிநாதன், குப்பையன் ஆகிய வேறு பெயர்களாலும் அழைக்கப் பெற்றார். இப்புலவர் திருவதிகை வீரட்டானத்து இறைவன் பேரில் ஒரு கலம்பகம் பாடினார் என்றும், அதற்காகத் திருவதிகைக் கோட்டையில் இவருக்கு மனையும் நிலங்களும் வழங்கப்பட்டன என்றும் திருவதிகை வீரட்டானத்திலுள்ள திருக்கோயில் மதிற்சுவர்க் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இவர் கலம்பகம் பாடிப் பரிசு பெற்றது கி.பி. 1536–ஆம் ஆண்டுத் துன்முகி ஆடித்திங்கள் 10–ஆம் நாளாகும் என்பதனையும் அக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவரது திருவதிகைக் கலம்பகம் இப்பொழுது கிடைக்கவில்லை.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 871)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ckexqvq/
தமிழ்“உத்தண்ட வேலாயுதபாரதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3ckexqvq/APA
Oliyon Research. (2026). உத்தண்ட வேலாயுதபாரதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3ckexqvq/MLA
"உத்தண்ட வேலாயுதபாரதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/3ckexqvq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment