ஆனகொந்தா
āṉakontā
(Anaconda) தென் அமெரிக்காவிலுள்ள பெரிய மலைப்பாம்பு (Water boa).
(Anaconda) தென் அமெரிக்காவிலுள்ள பெரிய மலைப்பாம்பு (Water boa). சில 30 அடி நீளம் வளரும். இந்தியாவில் இதற்கு இணையானது மலைப்பாம்புதான். இது நீரருகில் வசிக்கும்; நீந்தும். முட்டைகள் வயிற்றிலேயே தங்கிப்பொரித்துப் பாம்புக் குட்டிகளாக வெளிவரும். இதன் உணவு பறவைகளும் விலங்குகளுமாகும். மலைப்பாம்பு போலவே தன் இரையின் உடலை இறுகச் சுற்றி, மூச்சுவிடாமற் செய்து, சாக அடித்துப் பின் விழுங்கும். இது கடிக்கும். ஆனால் நஞ்சில்லை, கடி ஆறிவிடும். ஆனை கொன்றான் என்னும் சொல்லுக்குத் தொடர்புடையது ஆனகொந்தா என்னும் பெயர். இச்சாதி ஊர்வன வகுப்பில் பாம்பு வரிசையில் பாயிடீ (Boidae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. யூனெக்டிஸ் (Eunectes) என்பது சாதிப் பெயர்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 526)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3a9mfsg6/
தமிழ்“ஆனகொந்தா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3a9mfsg6/APA
Oliyon Research. (2026). ஆனகொந்தா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3a9mfsg6/MLA
"ஆனகொந்தா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3a9mfsg6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment