அரிச்சந்திர மயான காண்டம்
ariccantira mayāṉa kāṇṭam
அரிச்சந்திர மயான காண்டம் என்பது அரிச்சந்திரன் வரலாற்றில் அவன் சுடுகாட்டில் பிணம் எரிப்பவனாக அடிமை வாழ்வு வாழும் போது உள்ள துன்பக் கதையைச் சொல்லும் பகுதியாகும்.
அரிச்சந்திர மயான காண்டம் என்பது அரிச்சந்திரன் வரலாற்றில் அவன் சுடுகாட்டில் பிணம் எரிப்பவனாக அடிமை வாழ்வு வாழும் போது உள்ள துன்பக் கதையைச் சொல்லும் பகுதியாகும். இப்பகுதி அரிச்சந்திர மயான காண்டம் என்னும் பெயரில் கூத்தாகவோ நாடகமாகவோ நடித்துக் காட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு நடித்துக் காட்டும்போது இதனைக் காணும் மக்கள் அவல உணர்வால் நெஞ்சு நெகிழ்ந்து பெரிதும் ஈடுபடுவர். அரிச்சந்திரன், பொய் சொல்வதில்லை என்னும் விரதம் பூண்டவன், இவன், உண்மையைப் பேசுவதால் எத்தகைய இழப்பு வரினும் ஏற்றுக் கொள்வது என்னும் உறுதி கொண்டவன். இக்கொள்கையால் இவன் அடிமையாகிச் சுடுகாட்டில் ஏவல் புரியும் நிலைமை எய்தினான். செங்கோல் தாங்கிய கை, பிணஞ் சுடுகோல் தாங்கிப் பிணத்தை எரிப்பதில் ஈடுபட்டது. பெற்ற மகனைப் பிணமாகவும், தாலி கட்டிய மனைவியைக் கொலைகாரியாகவும் காண நேர்ந்தது. எனினும், தம் கொள்கையினின்றும் மாறாமல் உறுதியுடன் இருந்தான். இறுதியில் வாய்மை வெல்ல, துன்பங்கள் நீங்கப் பெற்று இன்பம் எய்தினான்.
அரிச்சந்திரன் கதை நாடகமாகத் தொடர்ந்து பல நாட்கள் நடைபெறும். நாடகம் தொடங்கி நடைபெறும் நாட்களில் யாராவது நாடகம் முடிவதற்கு முன் தம் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்றால், மயான காண்டம் தொடங்குவதற்கு முன்பே போய்விடுவர். மயான காண்டம் தொடங்கி விட்டால் பின் அரிச்சந்திரன் நாட்டைத் திரும்பப் பெற்று அரசாள்வது வரை அனைவரும் தங்கி இருப்பர். நாடகத்தில் பாத்திரங்களின் துன்பத்தைத் தம் சொந்தத் துன்பமாகவே மக்கள் கருதி வந்தனர்.
கிராமங்களில் ஒரு நாள் மட்டும் கூத்து நடத்துவதாக இருப்பின், அரிச்சந்திரன் கதையை நடிப்பிற்கு எடுத்துக் கொள்ளமாட்டார்கள். காரணம், விழாவின் இறுதியில் துன்பியல் முடிவு வருவதை மக்கள் விரும்பாமையாகும். மூன்று நாள் கூத்து நடப்பதாயின் இரண்டாம் நான் பொதுவாக இக்கதையை நடிப்பர். மயான காண்டத்தைக் கூத்தாக நடித்தால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.சு.ச.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 776)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/39vxvtsw/
தமிழ்“அரிச்சந்திர மயான காண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/39vxvtsw/APA
Oliyon Research. (2026). அரிச்சந்திர மயான காண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/39vxvtsw/MLA
"அரிச்சந்திர மயான காண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/39vxvtsw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment