சிலந்தி உறை அழற்சி
cilanti uṟai aḻaṟci
பெருமூளைத் தண்டு வட மண்டலத்தின் உள் உறைக்கும் (piamater), வெளி உறைக்கும் (duramater) இடையேயுள்ள சிலந்தி வலை போன்ற அமைப்புக் கொண்ட நடு உறையை அரக்னாய்டு என்பர்.
பெருமூளைத் தண்டு வட மண்டலத்தின் உள் உறைக்கும் (piamater), வெளி உறைக்கும் (duramater) இடையேயுள்ள சிலந்தி வலை போன்ற அமைப்புக் கொண்ட நடு உறையை அரக்னாய்டு என்பர். சிலந்தி உறை அழற்சியின் (arachnoiditis) போது, தண்டு வடம் பாதிக்கப்படுகிறது. மேற் கைகளில் கீழ் இயக்க நரம்பின் செயலிழப்பு அறிகுறிகளும், கால்களில் மேல் இயக்க நரம்பின் செயலிழப்பு அறிகுறிகளும் காணப்படுகின்றன.
மேக நோய் இதற்குக் காரணமாக இருந்த போதும், பெரும்பாலான நோய்களின் காரணங்களே தெரிவதில்லை, தண்டு வட நீரில் புரதம் மிகுதியாகக் காணப்படுகிறது. தண்டு வட வரைபடம் எடுத்தால், கழுத்துப் பகுதியில் அடைப்பு இருப்பது தெரிய வரும். மருத்துவம் பயன் அளிக்காது. ஒட்டிழைகளை அகற்றுவதும், ஹைட்ரோ கார்ட்டிசோனை உட்செலுத்துவதும் பயனளிக்கும். சில போது, காச நோயும் காரணமாக இருப்பதால், காச நோய் எதிர் மருந்துகள் கொடுக்கலாம். —அ. கதிரசேன் நூலோதி. Gajendra Singh. Text Book of Medicine, Third Edition, Vol. II, API Publishers, Bombay, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 276)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/364e9yx5/
தமிழ்“சிலந்தி உறை அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/364e9yx5/APA
Oliyon Research. (2026). சிலந்தி உறை அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/364e9yx5/MLA
"சிலந்தி உறை அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/364e9yx5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment