அறுகம்புல்
aṟukampul
அறுகம்புல் (அறுகு) விளைநிலங்களிலும் வெற்று நிலங்களிலும் பூமிக்கு மேலும் பூமியினுள்ளும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் தன்மையுடையது.
அறுகம்புல் (அறுகு) விளைநிலங்களிலும் வெற்று நிலங்களிலும் பூமிக்கு மேலும் பூமியினுள்ளும் பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் தன்மையுடையது. இது இந்திய நாட்டுப் புல்வகைகளுள் மிக நல்ல ஓரினம் ; புல்தரை அமைக்கச் சிறந்தது; தரையை நீர் அரித்துச் செல்லாமல் மண்ணை நிலையாக நிறுத்துவதற்கு மிகவும் ஏற்றது. இது நிரம்பக் கிளைத்து அடர்த்தியாக நெருங்கி வளரும். மாடும் குதிரையும் இந்தப் புல்லை விரும்பித் தின்னும். பயிர் செய்யும் இடங்களில் மட்டும் இது களையாக மிகவும் இடர் செய்யும். இதை விளைநிலத்திலிருந்து அகற்றப் பெருமுயற்சி வேண்டும். குடும்பம் : கிராமினீ (Gramineaé); இனம்: சைனொடான் டாக்ட்டிலான் (Cynodon dactylon).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 310)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/359tg8nt/
தமிழ்“அறுகம்புல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/359tg8nt/APA
Oliyon Research. (2026). அறுகம்புல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/359tg8nt/MLA
"அறுகம்புல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/359tg8nt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment