அட்டப்பிரதான்
aṭṭappiratāṉ
அட்டப்பிரதான் என்னும் சொல் எண்மர் அமைச்சர் எனப் பொருள்படும்.
அட்டப்பிரதான் என்னும் சொல் எண்மர் அமைச்சர் எனப் பொருள்படும். 17–ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் மகாராட்டிரத்தை ஆண்ட சிவாசி மன்னனின் அமைச்சரவை அட்டப்பிரதான் எனப்பட்டது. மராட்டிய மாவீரன் சிவாசி பண்டைய அறநூல்களின் கூற்றுப்படி ஆட்சி செய்தவன். அமைச்சர்களுக்குத் திட்டவட்டமான பணிகளை வகுத்தளித்தான். சிவாசி மக்களாட்சி முறையைப் பின்பற்றவில்லை. எனவே, அமைச்சர்கள் தனி அதிகாரம் பெறவில்லை. அரசாங்கத்தைத் திறமையாக நடத்த அமர்த்தப்பட்டவர்கள் இவ்வமைச்சர்கள். அட்டப்பிரதானில் இருந்த அமைச்சர்கள் எண்மரும் அரசனது ஆலோசனைக்குழு உறுப்பினர்களே. அந்த எண்மர்,
தலைமை நீதிபதியான நியாயாதிசு என்னும் பதவி வகிப்பவரே நாட்டின் மிக உயர்ந்த நீதிபதி உள்நாட்டிலும் இராணுவத்திலும் நீதியை நிலை நாட்டும் பொறுப்பு அவருடையதே. நிலம், கிராமம், குடும்பத் தவைவர் போன்ற விவரங்களில் வரும் உரிமை பற்றிய சிக்கல்களைத் தீர்த்து முடிவு கூறுவது இவரது தலையாய கடமை ஆகும்.
பண்டிதராவ், தனதயக்சா என்றும் சதர் என்றும் முகதாசிப்பு என்றும் சொல்லப்படுவார். இவரை அறத்துறைத் தலைவர் என்பதும் பொருந்தும் சமய விழாக்களுக்கான நாட்களை முடிவு செய்தல், சமயத்தைப் பழிப்பவர்களைத் தண்டித்தல், அறப்பணிகளுக்காக அரசரால் ஒதுக்கப்பெற்ற பெருந்தொகையை அந்தணர்களுக்குப் பகிர்ந்துகொடுத்தல் போன்றவை இவருடைய தலைசிறந்த பணிகளாம். சமயச் சட்டம், அரசருக்கான பஞ்சாங்கம், பொது ஒழுக்கத்தை வரையறுத்தல் போன்றவற்றிற்கும் இவரே பொறுப்பாளர் ஆவார்.
பேசுவா, அமாத்தியர் ஆகியோர்க்கு இராணுவப் பணிகள் கிடையா. ஏனையோர் படைகளை நடத்திச் செல்லுதலும், படைகளுக்குத் தலைமை தாங்குதலுமாகிய பொறுப்புகளை உடையராயிருந்தனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 207)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2s9kag4g/
தமிழ்“அட்டப்பிரதான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2s9kag4g/APA
Oliyon Research. (2026). அட்டப்பிரதான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2s9kag4g/MLA
"அட்டப்பிரதான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2s9kag4g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment