அரிதாகத் தோன்றும் இக்குருதிக்குடா, சிறுநீரகத் தமனியைப் பாதிப்பதோடு, பல சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. சிறுநீரகக் குருதிக்குடா, சிறுநீரகத்தினுள் உண்டாகும் பல மாற்றங்களால் குருதி அழுத்தம் கூடுகிறது. இக்குருதிக்குடா கிழிவதால், மரணமும் நேரக் கூடும். பொதுவாக கூழ்மைத் தடிப்பு (atherosclerosis) உண்டாகும் குருதிக்குடா, சில சமயங்களில் பிறவிக் குறைபாடாகவும் காணப்படும். சிறு நீரகத்துள் தமனி நுழையு முன், மூன்று கிளைகளாகப் பிரிகிறது. இவ்விடத்திலிருந்து ஓரிரு செ.மீ. தொலைவில் குருதிக்குடா உண்டாகும். சில சமயங்களில், தமனியில் ஏற்படும் தசை நார் நசிவால் பல குருதிக்குடாக்கள் க ணப்படும். இரண்டு பக்கத் தமனிகளிலும் குருதிக்குடா காணப்பட்டாலும், 50% நோயாளிகளில் இரு பக்கமும் ஒரே சமயத்தில் பாதிக்கப்படும். சில குருதிக்குடாக்கள், மிகப் பெரிய அளவில் ---மையாலும் கால்சியம் படியாத் தன்மையாலும் தோன்றும் சிக்கல்களால் கண்டு பிடிக்கப்படுகின்றன. சிறுநீரகத்தில் இந்நோய் இரண்டு வித மாற்றங்களை உண்டாக்கும். குருதிக் குடாவுள் உண்டாகும் உறை படிமத்தால், தக்கை பிரிந்து சிறு தமனிகளை அடைந்து, நலிவை உண்டாக்கும். மற்றொன்று இதிலிருந்து வளரும் குருதிக் கட்டி சிறுநீரகக் குருதி ஓட்டத் தடங்கல் நோய் உண்டாக்கும். இதனால், சிறுநீரில் குருதி கலந்து வெளியேறுவதுடன், இடுப்பில் வலியும் உண்டாகும். குருதி அழுத்தம் 60% நோயாளிகளில் காணப்படும். அரிதாகப் பிளவு படும் இக்குருதிக்குடா, பெண்களின் பேறு காலத்தில் நிகழக் கூடும். மாறாக, காயங்களால் இத்தமனியில் உண்டாகும் குருதிக்குடா பிளவுபட வாய்ப்புண்டு. மற்றோர் அரிதாகத் தோன்றும் ---ல், இக்குருதிக்குடாவில் தமனி நாளப் புரை உண்டாவதாகும். இதில், ‘புர்…புர்’ என்ற ஒலியும் குருதி அழுத்தமும் காணப்படும். ஆய்வுகள். எக்ஸ் கதிர்ப் படத்தில், பிற குருதிக் குடாவில் காணப்படும் மோதிர வளைவான கால்சியப் படிவு (signet ring calcification) காணப்படுவதில்லை. சிரை மூலம் எக்ஸ் கதிர் புகா நீர்மத்தைச் செலுத்தி, சிறுநீரகத்தைப் படமெடுக்க (intravenous phylography), சிறுநீரகத்தில் இக்குருதிக்குடா அழுத்துவதைக் காண முடியாது. பெருந்தமனி வரைபடம், கேளா ஒலி வரைவி (ultrasonogram) முதலியவை தற்போது இந்நோயை எளிதில் கண்டு பிடிக்க உதவுகின்றன. மருத்துவம். இக்குருதிக்குடா நோய்க்குறியைத் தோற்றுவித்தாலோ, மிகைக் குருதி அழுத்தம் உண்டாக்கினாலோ, இதை எடுத்துக் களையலாம். இக்குருதிக்குடாவை வெட்டி எடுத்துச் சிறுநீரகத் தமனியைச் செப்பனிட முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை வெட்டி எடுத்துக் களைவதே நோயாளி மீண்டும் இயல்பான குருதி அழுத்த நிலைக்கு வர உதவும். இவ்வகை நோயாளிகளில் குருதிக்குடாவின் பிளப்பால் மரணம் ஏற்படுவதில்லை, மாறாக, சிக்கலான குருதி அழுத்தம், சிறுநீரகப் பாதிப்பு முதலியவற்றாலேயே உண்டாகும். —மா. ஜெ. பிரெடெரிக் ஜோசப் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்து, புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->