இது நீர்க் குழாய்க் கொதி கலன்களில் ஒரு வகை. இவ்வகைக் கொதி கலன்களில் குழாய்கள் நேரான வடிவத்திலும், சம நீளத்திலும் இருக்கும். இவை ஒரே வகை அமைப்பில், இணையாக அமைந்திருக்கும். இவற்றின் இரு முனைகளும், தலைக் குழாய் அமைப்புடன் (headers) இணைக்கப் பட்டிருக்கும். தலைக் குழாய் வடிவமைப்பைப் பொறுத்துப் பெட்டி வகை, குறுக்கு வகை என இவை இரு வகையாகப் பிரிக்கப் படுகின்றன. பெட்டி வகை, தலைக் குழாய்க் கொதி கலன்களில் விலை குறைந்தது. இதில் தலைக் குழாயின் பரப்பு, குழாய் அச்சுக்கு நேர் குத்தாக இருக்க வேண்டும். எனவே, இது கிடைத் தளத்திற்குச் செங்குத்தாக இருக்க இயலாது. ஏனெனில், குழாய்கள் கிடைத் தளத்திற்குச் சற்று சரிவாக அமைக்கப் பட வேண்டும். இதனால், சுழலை எளிதாகக் கட்டுப் படுத்தலாம். குறுக்கு (sectional) வகைத் தலைக் குழாய்க் கொதி கலன்கள் உணர் அழுத்தத்திற்கு ஏற்றவை. தலைக் குழாயின் பரப்பு கிடைத் தளமாக இராமையால், தலைக் குழாயினை வார்ப்பினாலோ, அடித்து வடித்தல் (forging) மூலமாகவோ உருவாக்கலாம். இவ்வகையில், தலைக் குழாய் கிடைத் தளத்திற்குச் செங்குத்தாகவும் அமைக்கப் படுகிறது. இவ்வகைக் கொதி கலன்களை உருவாக்கும் போது, முதலில் குழாய்கள்அவற்றிற்கென ஏற்படுத்தப்பட்ட துளைகளில் பொருத்தப் படுகின்றன. பிறகு, இவை ஒரு தனிப் பட்ட தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தித் தலைக் குழாயின் சுவரில் இணைக்கப் படுகின்றன. இது பற்று வைப்பு முறையினை விடச் சிறந்தது. ஏனெனில், குழாயை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது, அதனை மட்டும் தனியே அகற்றி விடலாம். கொதி கலன். இதனால், தலைக் குழாயின் சுவர் பாதிப்படையாது. பொதுவாகப் பயனாகும் வெப்பமூட்டும் முறைகளில், இவ்வகைக் கொதி கலன்களில் பயன் படுவன பின்வருமாறு: அரை உருளி வடிவக் கணப்பி. நீண்ட மேலமைந்த உருளியுடன், குறைந்த நீளம் உடைய சிறிய உருளி இணையாக அமைக்கப் பட்டுள்ளது. மேலமைந்த உருளிக்கும், கீழேயுள்ள உருளிக்கும் இடைப் பட்ட பரப்பு எரியூட்ட உதவுகிறது. நீர்க் குழாய்கள் கணப்பின் பக்கச் சுவர்களை சூழ்ந்துள்ளன. அவை உருளியுடனும், கீழேயுள்ள தலைக் குழாய்களுடனும் இணைக்கப் பட்டுள்ளன. இக்கொதி கலன்களில் நீர், உருளைகளிலிருந்து நீர் ஒரு பக்கத்திலுள்ள தலைக் குழாய்களின் வழியே, இறங்கு குழாய்களின் வழி. சென்று, மறு பக்கத் தலைக் குழாய் வழியே மேலேறி, மீண்டும் உருளையை வந்தடையும். அவ்வாறு, வந்து சேரும் நீரின் பெரும் பகுதி நீராவியாகவும், சிறு பகுதி மிகுந்த வெப்ப நிலையுள்ள நீராகவும் இருக்கும். சூடாக்கப் பட்ட நீர், மற்றும் நீராவியின் அடர்வு குறைவாக இருப்பதால், இது தானாகவே நீர்க் குழாய்களிலிருந்து மேலேறும். நீர்க் குழாய்களைச் சாய்வாக அமைப்பது, நீர் ஓட்டத்திற்கு வசதியாக இருக்கிறது. பின் நீராவி உருளையின் மேற்பகுதியில் தனியாகப் பிரிந்து விடும். இதனைத் தேவைப் படும் போது, நிறுத்து அடைப்பிதழ் (Stop valve) மூலம் எடுத்துக் கொள்ளலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> காப்புத் திறப்பான் அல்லது அடைப்பிதழ் (Safety valve), நீர் மட்டம் காட்டி, அழுத்த அளவி ஆகியவை உருளையுடன்இணைக்கப் பட்டுள்ளன. தலைக் குழாயில் ஒவ்வொரு நீர்க் குழாய்க்கு எதிரிலும், ஒரு மூடியுடன் கொண்ட துளை உள்ளது. நீர்க் குழாயைத் தூய்மையாக்கவும், சோதனையிடவும் இது உதவுகிறது. ஒவ்வொரு தலைக் குழாயின் அடி முனையிலும், ஒரு சேற்றுப் பெட்டி உள்ளது. நீரிலுள்ள மாசுகள் இதில் தங்கி விடும். அவ்வப்போது, இவை வெளியேற்றப் படுகின்றன. பேப்காக் மற்றும் வில்காக்ஸ் ஸ்டேய்ன் முல்லர் ஆகிய நிறுவனங்கள், இவ்வகைக் கொதி கலன்களைத் தயாரிக்கின்றன. இவற்றைத் தலைக் குழாய்க் கொதி கலன்கள் எனவும் குறிப்பிடுவர். இவற்றின் முதன்மைப் பயன் எளிதான முறையில், இவ்வகைக் கொதி கலன்களைத் தூய்மையாக்க இயலும். மேலும், இவற்றை ஆய்வு செய்வதும் மிக எளிது. தலைக் குழாய்களில் எதிரெதிர்க் குழாய் முனைகளில் உள்ள கைத்துளைகள் இதற்குத் துணையாகின்றன. —கே. ஆர். கோவிந்தன்