அடிபிக அமிலம்
aṭipika amilam
அடிபிக அமிலம் (Adipic Acid): [HOOC-CH2-CH2-CH2-CH2 - COOH] இது பீட் கிழங்கில் உள்ளது.
அடிபிக அமிலம் (Adipic Acid): [HOOC-CH2-CH2-CH2-CH2 - COOH] இது பீட் கிழங்கில் உள்ளது. கொழுப்புக்களையும், ஆமணக்கெண்ணெயையும் ஆக்சிகரணித்து இதைப் பெறலாம். தொழில்களில் இது முக்கியமாகப் பயன்படுகிறது. சமையல் பொடிகளிலும், தாதுநீர்களிலும் இது டார்டாரிக அமிலத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. நைலான் என்ற தொகுப்புப் பட்டு இழையின் தயாரிப்பில் இது பயன்படுகிறது. ஹெக்சா- மெதிலீன்-டையமீன் (NH2— [CH2) – NH2] என்ற பொருளுடன் இது வினைப்பட்டு மூலக்கூறு நிறை உயர்ந்த பாலிஅமைடு ஒன்றை அளிக்கிறது. இளகிய நிலையில் இக்கூட்டை மெல்லிய இழைகளாக இழுக்கலாம். இந்த இழைகளை மேலும் இழுத்து நான்கு மடங்கு நீளமுள்ளதாகவும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் இப்பொருளின் தன்மை மாறி இழுவலிமிக்க பளபளப்பான இழைகளைப் பெறலாம். இவ்விழை நைலான் (த. க.) என்ற பெயருடன் வழங்குகிறது.எஸ். எஸ். க.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 81)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2ny755ee/
தமிழ்“அடிபிக அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ny755ee/APA
Oliyon Research. (2026). அடிபிக அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2ny755ee/MLA
"அடிபிக அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2ny755ee/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment