மெய்கண்டார்
meykaṇṭār
பொருள்கள் · Senses
1.
வேளாளர். திருப்பெண்ணாகடம். வேறுபெயர். சுவேதனப் பெருமாள். சிறப்புப் பெயர்; திருவெண்காடர், சைவ சிகாமணி. இவர்தம் குருபரஞ் சோதி முனிவர். இவர் தம் அருளுரை பெற்று மெய்கண்டார் என்னும் பெயர் பெற்றவர். திருஞானசம்பந்தரைப் போல் இவர் ஈராண்டிலேயே சிவஞானம் பெற்றவர். தமிழுலகம் உய்ய வேண்டிச் சிவ ஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த முதல் நூலை அருளினார். இவர்தம் மாணாக்கர் 49பேர். முதல் மாணாக்கர் சகலாகமபண்டிதர். அருள்நந்தி என்னும் பெயர் சூட்டப்பட்டவர். சிவஞான போதத்திற்குச் சிவஞான சித்தியார் என்னும் வழிநூல் அருளியவர். மெய்கண்டார் காலம் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2j9vzrsf/
தமிழ்“மெய்கண்டார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j9vzrsf/APA
Oliyon Research. (2026). மெய்கண்டார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2j9vzrsf/MLA
"மெய்கண்டார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2j9vzrsf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment