ஆஞ்சு
āñcu
ஆஞ்சு பிரான்சின் ஒரு பழைய மாகாணம்; பாரிஸிற்கு மேற்பாலுள்ள பிரதேசம்.
ஆஞ்சு பிரான்சின் ஒரு பழைய மாகாணம்; பாரிஸிற்கு மேற்பாலுள்ள பிரதேசம். 11. 12ஆம் நூற்றாண்டுகளில் பிரான்சில் ஒரு முக்கியமான படைமானியமாக இருந்தது இங்கிலீஷ் அரசனான I-ம் ஹென்ரி தன் மகள் மாடில்டாவை ஜாப்ரே பிளான்டாஜனட் (GeoffreyPlantagenet)என்பவனுக்குமணம் செய்து கொடுத்தான்; அவர்களுடைய மகனான III-ம் ஹென்ரி இங்கிலிஷ் அரசனானபோது அவன் இங்கிலாந்து, நார்மண்டி, ஆஞ்சு ஆகிய மூன்றிற்கும் அரசனானான். அன்றியும், பிரிட்டனி, அக்விட்டேன் என்னும் பிரதேசங்களும் அவன் இராச்சியத்தில் அடங்கியிருந்தன. இவை முழுவதையும் சேர்த்து 'ஆஞ்சுப் பேரரசு' என்றும் சொல்வதுண்டு. 1203-ல் பிரெஞ்சு மன்னனால் ஆஞ்சு கைப்பற்றப்பட்டு, அரச வமிசத்தவர்களின் சொந்த உரிமையாக இருந்து வந்தது; 1584-ல் இறுதியாகப் பிரெஞ்சு இராச்சியத்தின் பகுதியாயிற்று. ஆஞ்சு இருந்த பிரதேசம் தற்போது 'மெயின் வார்' என்னும் மாகாணமாக இருக்கிறது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 387)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2hmykqnh/
தமிழ்“ஆஞ்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hmykqnh/APA
Oliyon Research. (2026). ஆஞ்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2hmykqnh/MLA
"ஆஞ்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2hmykqnh/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment