செம்பு இழப்பு
cempu iḻappu
செம்புக் கடத்திகளில் மின்னோட்டம் பாயும் போது, அதன் மின் தடையால் வெப்பமாக மாற்றப் பட்டு, ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.
செம்புக் கடத்திகளில் மின்னோட்டம் பாயும் போது, அதன் மின் தடையால் வெப்பமாக மாற்றப் பட்டு, ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. இந்நிகழ்வு செம்பு இழப்பு (copper loss) எனப்படுகிறது. இது மின் மாற்றி, மின்னோடி, மின்னாக்கி போன்றவற்றில் ஏற்படுகிறது. மின்னோட்டத்தின் அளவை (ஆம்பியர்), ஈரடுக்கு மின் தடையின் அளவை (ஓம்), இரண்டையும் பெருக்கிச் செம்பு இழப்பு, வாட்களாகக் கணக்கிடப்படுகிறது. இது மின்னோட்டத்தின் பெருக்கல் மின் தடை இழப்பு எனப்படும்.
செம்பு இழப்பு முழுதும் வெப்பமாக மாற்றப் படுகிறது. அனுமதிக்கக் கூடிய வெப்ப உயர்வு மின் கருவிகளிலுள்ள மின்னோட்டத்தின் நியமத்தை அறுதியிடும். மேலும், அது செம்புக் கடத்திகளில் பயன்படும் மின் காப்புப் பொருள்களைப் பொறுத்து முடிவு செய்யப் படும். வெப்ப உயர்வைக் கட்டுப் படுத்தும் காரண எண்ணாகச் செம்பு இழப்பு உள்ளது. எந்த ஒரு மின் கருவி, மின் பளுவின் ஈரடுக்கால் மிகுதியாகும் நிலையான செம்பு இழப்பும், வேறுபடுகிற செம்பு இழப்பும் சமமாக இருக்குமாறு, குறிப்பிட்ட மின் பளுவில் இயங்குகிறதோ, அப்போது, அந்த மின் கருவி பெரும அளவு மின்திறம் (efficiency) பெற்று விளங்குகிறது. —மா. தாயுமானசாமி நூலோதி. B.L. Theraja, A Text Book of Electrical Technology, Sixteenth Edition, S.Chand and Co. Ltd, New Delhi, 1977.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 760)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2fg9c38h/
தமிழ்“செம்பு இழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2fg9c38h/APA
Oliyon Research. (2026). செம்பு இழப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2fg9c38h/MLA
"செம்பு இழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/2fg9c38h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment