இந்திய விஞ்ஞான நிலையம்
intiya viññāṉa nilaiyam
இந்திய விஞ்ஞான நிலையம் (Indian Institute of Science, Bangalore) ஜே.
இந்திய விஞ்ஞான நிலையம் (Indian Institute of Science, Bangalore) ஜே. என். டாட்டாவும் அவருடைய குமாரர்கள் சர் டோராப் டாட்டா, சர் ரத்தன் டாட்டா ஆகியவர்களும் கொடுத்த நன்கொடையாலும் இந்திய அரசாங்கமும் மைசூர் அரசாங்கமும் அளித்த ஆதரவாலும் 1911-ல் பெங்களூரில் நிறுவப்பெற்றது. இங்குள்ள சோதனைச் சாலைகள் பட்டதாரிகள் ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய வசதிகள் உடையன. பல விஞ்ஞானத் துறைகளில் பெரும்பட்டங்கள் பெறுவதற்குரிய கல்வியும் பயிற்சியும் அளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நூல் நிலையத்தில் 46,227 (1952) விஞ்ஞான நூல்களும் இதழ்களும் உண்டு. இங்கு நடைபெறும் ஆராய்ச்சி விவரங்களைக் கால் ஆண்டு இதழாக வெளியீடுகிறார்கள்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 628)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2etru3u5/
தமிழ்“இந்திய விஞ்ஞான நிலையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2etru3u5/APA
Oliyon Research. (2026). இந்திய விஞ்ஞான நிலையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2etru3u5/MLA
"இந்திய விஞ்ஞான நிலையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2etru3u5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment