தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சோழர்கள் வெளியிட்ட காசுகளுள் பழமையானவை. விசயாலய சோழன் முதல் சுந்தர சோழன் வரையில் ஆண்ட சோழர் காசுகள் இதுவரையில் கிடைக்கவில்லை. உத்தம சோழனது ஆட்சிக்காலத்தில் வழங்கி வந்த தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களால் ஆன காசுகள் கிடைத்துள்ளன. அவற்றில் மூன்று வகைக் காசுகள் உள்ளன. முதல்வகைக் காசின் முன்புறம் புலி, இரட்டை மீன், வில் ஆகிய மூன்று உருவங்களும், பின்புறத்தில் உத்தம சோழன் என நாகரியில் எழுதப்பட்ட எழுத்துகளும் உள்ளன. இவ்வகைக் காசுகளே அதிக அளவில் கிடைத்துள்ளன. இரண்டாம் வகைக் ஒருபுறம் புலியும், மறு புறம் மீனும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் ஓரத்தில் ‘மதுராந்தகன்’ என்னும் பெயர் தமிழிலும் கிரந்தத்திலும் எழுதப்பட்டுள்ளது. மூன்றாம் வகைக் காசுகளின் இருபுறமும் புலியும் மீனும் பொறிக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் ‘உத்தம் சோழன்’ என்று எழுதப்பட்டுள்ளது. ம.இரா.த.