ஆவியாகு வெப்பம்
āviyāku veppam
(Heat of Vaporiza-tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை.
(Heat of Vaporiza-tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறையுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப்படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதிராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 501)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2a8d9nxy/
தமிழ்“ஆவியாகு வெப்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a8d9nxy/APA
Oliyon Research. (2026). ஆவியாகு வெப்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2a8d9nxy/MLA
"ஆவியாகு வெப்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2a8d9nxy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment