நெய்க் கொட்டை
neyk koṭṭai
இதன் தாவரவியல் பெயர் ஹார்புல்லியா ஆர்போரியா (Harpullia arborea) என்பதாகும்.
இதன் தாவரவியல் பெயர் ஹார்புல்லியா ஆர்போரியா (Harpullia arborea) என்பதாகும். ஹா. இம்பிரிக்கேட்டா (H. imbricata), ஹா. குபனியாய்டெஸ் (H. cupaniodes) என்பன இதன் இணை தாவரப் பெயர்களாகும். இது இந்தியாவில் அஸ்ஸாம், ஒரிஸ்ஸா, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் 1 கி.மீ. உயரம் வரை உள்ள இடங்களில் வளர்கிறது.
அமைப்பு. இது அழகு தரும் மரம். இதன் அடி மரம் சீராக இருக்கும். பட்டை இளம் பழுப்பு நிறமானது. இலைகள் மாற்றடுக்கில் 3–4 இரட்டைச் சிறகு கூட்டிலைகளாக இருக்கும். சிற்றிலைகள் முட்டை நீள் வட்டமானவை. இவற்றின் அடிப் பகுதி சாய்வாயிருக்கும். தோல் போன்ற கீழ்ப் பகுதி இளம் பச்சையானது. ஒழுங்கான பூக்கள் இளமஞ்சள் நிறமாயும், ஒளி வீசும் ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும். இவை பல பால் ஈரகம் கொண்டவை. புல்லி இதழ்கள் 4–5 நேரானவை. சமமாயும், திருகு இதழ் அமைவிலும் இருக்கும். அல்லி இதழ்கள் 4–5, வழக்கமாகக் கால்களுடனும், குறுகி நீள் வட்டமாகவும், செதில்களற்றும் இருக்கும். வட்டத் தட்டு தெளிவற்றது.
மகரந்தத் தாள்கள் 5–8, வட்டத் தட்டின் உட்புறத்தில் செருகியிருக்கும். மகரந்தக் கம்பி மென்மையாயிருக்கும். மகரந்தப் பை நீள் சதுரமாயிருக்கும். இரண்டு அறைகள் கொண்ட சூல் பை முட்டை வடிவானது. சூலகத் தண்டு, நீட்சியடைந்திருக்கும். சூலக முடி மெலிந்து, ஏறக் குறையத் திருகியிருக்கும். ஒவ்வொரு சூலக அறையும், இரண்டு சூல்களைக் கொண்டிருக்கும். கனி, தோல் போன்ற இரண்டு விதைகள் கொண்ட அறை வழி வெடிக்கும் (loculicidal) வகையாகும். கனி, இரண்டு தடுக்கிதழ்களுடன் பழுப்பு ஆரஞ்சு நிறம் கொண்டது. அறைகளில் 1–2 விதைகளிருக்கும். இவை சற்று உருண்டையாகவும், கறுப்பாகவுமிருக்கும். வழக்கமாகப் பத்திரியுடன் (aril) காணப் படும். கரு தடித்த அரைக் கோண வித்திலைகளுடன் காணப் படும்.பயன். காய்கள் சோப்பைப் போன்று, நுரையைத் தரும். பட்டை, யானைக் கொளுஞ்சி (Entada scandens) என்னும் கொடியைப் போன்று, மயிரிலுள்ள அழுக்கைப் போக்கும். மீன்களைக் கொல்லும். விதையிலிருந்து எடுக்கப் படும் எண்ணெயை வாத வலிக்குத் தடவலாம். —கோ. அர்ச்சுனன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 181)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29qvd59e/
தமிழ்“நெய்க் கொட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/29qvd59e/APA
Oliyon Research. (2026). நெய்க் கொட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/29qvd59e/MLA
"நெய்க் கொட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/29qvd59e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment