வடமேற்கு ஆப்பிரிக்காவின் குறுக்கே செல்லும் மலைகள், 2,410 கி.மீ. நீளமுள்ளவை. அட்லாண்டிக்குப் பெருங்கடலிலுள்ள கேப் அட்லாசு மலைகள் ரீர் (Cape Rhir) என்னுமிடத்திலிருந்து மத்தியதரைக் கடலிலுள்ள கேப் போன் (Cape Bone) வரையிலும் மொராக்கோ, அல்சிரியா, துனிசியா ஆகிய நாடுகளின் குறுக்கே செல்கிறது. கிரேக்க தைட்டன் ஆட்லெசு (Titan Atlas) என்பவன் நினைவாக இம்மலைகள் இப்பெயர் பெற்றன. இவை கரையோரப் பகுதியில் உயரம் குறைவாகவும் உள்நாட்டில் மிகுதியாகவும் தொடர்ச்சியாகச் செல்கின்றன. உள்நாட்டு மலைகளுள் குறிப்பிடத்தக்கது மொராக்கோ மலைத் தொடராகும். இம்மலைத் தொடரின் நடுவிலுள்ள திசு மலையுச்சி மிக உயரமானது. வட ஆப்பிரிக்கச் சுதேசிகளான பர்பர் இம்மலைப் பகுதிகளில் வாழ்கின்றனர். வெள்ளி, ஈயம், இரும்பு, தாமிரம் போன்றவை இங்குக் கிடைக்கும் கனிப் பொருள்கள்.