முல்லைப்பாட்டு
mullaippāṭṭu
பொருள்கள் · Senses
1.
இது சங்க மருவிய பத்துப்பாட்டில் ஒன்று. இதன் மூலம் பிரிந்த தலைமகன் திரும்பும் அளவும் தலைவி ஆற்றியிருந்தமையும், அவன் வருகையைக் கண்டு தோழி கூறுவதையும் அறியலாம். இதனைக் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனர் நப்பூதனர் பாடியருளினர். 103 அடிகளைக் கொண்டது. இதன் மூலம் பல அரிய குறிப்புகளை அறிந்து இன்புறலாம். நிமித்தம் பார்க்கும் வழக்கமும் பெண்கள் அரசனது பாடி விட்டில் அவனுக்குக் காவல் பெண்களாக இருந்து காத்து வந்தனர் என்பதும், யவனர்கள் காவல்காரர்களாவும் அமைக்கப்பட்டனர் என்ற செய்தியும், ஊமையர்களான மிலேச்சர் அரசன் பள்ளிகொள்ளும் இடத்தில் காவல் காத்தனர் என்ற செய்தியும் அறிந்து இன்புறலாம். காலம் கடைச்சங்க காலம். இதற்கு நச்சினார்க்கினியர் உரை உண்டு. இத்தகைய நூலுக்கு அழகுக்கு அழகு செய்வது போல மறைமலை அடிகள் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலையும் எழுதியுள்ளார்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/24cn2c3b/
தமிழ்“முல்லைப்பாட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24cn2c3b/APA
Oliyon Research. (2026). முல்லைப்பாட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/24cn2c3b/MLA
"முல்லைப்பாட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/24cn2c3b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment