{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ztxpjkr4/", "data": {"id": "ztxpjkr4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ztxpjkr4/", "kind": "word", "headword": "ஆப்பிள்டாக்", "romanization": "āppiḷṭāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:45.348011+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய செலவு குறைந்த குறும் பரப்புப்பிணையம் (Local Area Network). இதில் ஆப்பிள் மற்றும் ஆப்பிள் அல்லாத கணினிகள் தொடர்பு கொண்டு அச்சுப் பொறி மற்றும் கோப்புகள் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். ஆப்பிள் அல்லாத கணினிகள் ஆப்பிள்டாக்கின் மென்பொருளையும் வன்பொருளையும் கொண்டிருக்க வேண்டும். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ மாதிரியை ஒத்த நெறிமுறைகளையே இந்தப் பிணையம் பின்பற்றுகிறது. சட்டம் (frame) எனப்படும் பொட்டலங்களில் தகவல் பரிமாற்றம் செய்கிறது. ஒர் ஆப்பிள்டாக் பிணையம் இன்னொரு ஆப்பிள்டாக் பிணையத்துடன் இணைவி (bridge) மூலமாகவும், வேறுபட்ட பிணையங்களுடன் நுழைவி (gateway) மூலமாகவும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்", "needs_definition": false, "gloss_en": "AppleTalk", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 83"}]}}