{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zqkursve/", "data": {"id": "zqkursve", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zqkursve/", "kind": "article", "headword": "இலவல் பியரீ", "romanization": "ilaval piyarī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.169028+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பார் பிரெஞ்சு அரசியல் வாதிகளுள் ஒருவர்.", "body_ta": "என்பார் பிரெஞ்சு அரசியல் வாதிகளுள் ஒருவர். இவர் தலை சிறந்த வழக்குரைஞராகயும் நுண்ணறிவு மிகுந்த அரசியல் வாதியாகவும் விளங்கினார். இவர் படிப்படியாக முன்னேறி, 1931–ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சராகவும் ஆனார். இரண்டாம் உலகப் போர் மூளும் வரை (1939) இவர் பல பதவிகளைப் பெற்றிருந்தார். செருமனி பிரான்சின்மீது படையெடுத்து அதனைச் சரணடையச் செய்தது. பிரான்சு செருமனியுடன் சேர்ந்துகொள்வதால், பல நன்மைகள் பிறக்கும் என்று இவர் நினைத்தார். ஆனால் பெரும்பாலான பிரான்சு மக்கள் இவர் கருத்துகளை ஏற்க மறுத்துவிட்டனர். முதல் உலகப் போரின்போது அவர்கள் பட்ட சொல்லொணாத் துயர்களைப் பலர் நினைவு கூர்ந்தனர். செருமானியர்களை அவர்கள் வெறுத்தார்கள்.\n\nஇலவல் பியரீ (Laval Pierre) தலைமை அமைச்சராக 1942 முதல் 1944 வரை ஆட்சி நடத்தினார். இதனை விச்சி அரசு (Vichy Government) அல்லது செருமானியர்களுடன் சேர்ந்து கொண்ட பிரெஞ்சு அரசு என்று குறித்தனர். இரண்டாம் உலகப்போர் முடிவுற்றதும் இலவல் கைதுசெய்யப்பட்டுத் துரோகக் குற்றத்திற்காக விசாரனை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்."}}