{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zpnpj27p/", "data": {"id": "zpnpj27p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zpnpj27p/", "kind": "article", "headword": "நைட்ரைல்", "romanization": "naiṭrail", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.057121+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கரிம வேதிச் சேர்மங்களில் ஒரு வினைத் தொகுதியான இதன் பொது மூலக்கூறு வாய்ப்பாடு RC≡N ஆகும்.", "body_ta": "கரிம வேதிச் சேர்மங்களில் ஒரு வினைத் தொகுதியான இதன் பொது மூலக்கூறு வாய்ப்பாடு RC≡N ஆகும். நைட்ரைல் தொகுதியை நீராற் பகுத்தால், கரிம அமிலம் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் அமிலத்தின் பெயரை அடிப்படையாகக் கொண்டு, அமிலக் காரணியான நைட்ரைலின் பெயர் அமையும். எடுத்துக் காட்டாக, CH₃CN என்பது அசெட்டோ நைட்ரைல் என்னும் பெயர் பெறுகிறது. ஏனெனில், இது நீராற் பகுக்கப் படுவதால், அசெட்டிக் அமிலம் CH₃COOH) உருவாகிறது. பெயரிடுவதில் மாற்று முறையாக, -CN தொகுதியைச் சயனைடு என்பதாகக் கொண்டு CH₃CN என்பது மெத்தில் சயனைடு எனப் படும். அணைவுச் சேர்மங்களில், (complex compounds) –CN என்பது சயானோ உறுப்பாகவும் பெயர் பெறும்.\n\nஒரு மூலக் கூறில் நைட்ரைல் தொகுதி உள்ளதா என்பதை, பட்டை நிரல் (band spectrum) மூலம் கண்டறிய முடியும். முப்பிணைப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டும் 2260–2222 செ.மீ. அளவு அகச் சிவப்பு உறிஞ்சு பட்டையில் அமைவதைக் கொண்டு இதை அறியலாம்.\n\nஅமிலச் சூழலிலும், காரச் சூழலிலும் நைட்ரைல்களை நீராற் பகுத்தால், அமிலங்கள் கிடைக்கும் . \\begin {align} RCN + CH^- + H_2O &\\rightarrow RCOO^- + NH_3 \\\\ RCN + H^- + 2H_2O &\\rightarrow RCOOH + NH_4 \\\\ \\end {align} நிக்கல், கோபால்ட் ஆகிய வினை வேக மாற்றிகளின் முன்னிலையில், நைட்ரைல்கள் ஒடுக்க வினை மூலமாக ஓரிணை அமீன்களை உண்டாக்குகின்றன. இத்தகைய ஒடுக்க வினை லித்தியம்–அலுமினியம்–ஹைட்ரைடு மூலமாகவும் நிகழலாம். RCN + 2H_2 \\rightarrow RCH_2NH_2 கிரிக்னார்டு வினை காரணிகள் நைட்ரைல்களுடன் வினைப் பட்டு, பின்னர் நீராற் பகுக்கப் படும் போது, கீட்டோன்கள் கிடைக்கின்றன. RCN + R'MgX \\rightarrow RR'C = NMgX \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{H_2O{\\longrightarrow RCOR' தொகுப்பு முறையில் கரிமச் சேர்ம மூலக் கூறுகளின் சங்கிலித் தொடரை நீட்டிக்கச் சயனைடுகள் (நைட்ரைல்கள்) பயன் படுன்றன. முதலில் அல்கைல் ஹாலைடுகள் அல்கைல் சயனைடுகளாக மாற்றப் பட்டு, இம்முறையினால் ஒரு கார்பன் மேலும் கூடுதலாக இணைக்கப் படுகிறது. இந்த வினை முறை பெரும்பாலும் ஆல்கஹால் தொகுதியிலிருந்து தொடங்கும். ROH \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{HX{\\longrightarrow RX \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{NaCN{\\longrightarrow RCN ஓரிணைய அல்ஃபாட்டிக் ஹாலைடுகளில் இந்த வினை முறை நன்கு செயற்படுகிறது. ஈரிணைய, மூவிணைய, ஹாலைடுகளுடன் வினைப் படுத்தினால், அல்க்கைல் சயனைடுகள் கிடைப்பதில்லை. ஏனெனில், சோடியம் சயனைடு, பொட்டாசியம் சயனைடு போன்ற உலோக சயனைடுகள் கார இயல்பு பெற்றிருப்பதனால், வினையின் போது உருவான அல்கைல் ஹாலைடுகளுடன், அவை வினை புரிந்து நைட்ரஜன் ஹாலைடு மூலக் கூறை வெளியேற்றி, நிறைவுறாச் சேர்மங்களை உண்டாக்குகின்றன.\n\nஅரோமாட்டிக் நைட்ரல்களைத் தொகுப்பு வினைகள் மூலம் பெறலாம். ஓரிணைய அமின்களை, டைஅசோ நிலைக்குட் படுத்தினால், கிடைக்கப் பெறும் டைஅசோனியம் சேர்மத்துடன், காப்பர் சயனைடைக் காப்பர் முன்னிலையில் வினைப் படுத்தினால், அரோமாட்டிக் நைட்ரைல் கிடைக்கும். ArNH_2 \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{HONO{\\longrightarrow ArN_2^+ \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{ \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{CO{\\longrightarrow { \\scriptscriptstyle NaCN ArCN அமில அமைடுகள் அல்லது ஆக்சைம் சேர்மங்களைப் பாஸ்பரஸ் பெண்ட்டாக்சைடு அல்லது அசெட்டிக் அமில நீரிலி பயன் படுத்தி, வினைப் படுத்தினால் நீர் மூலக் கூறுகள் வெளியேற்றப் படுவதன் விளைவாக, நைட்ரைல்கள் கிடைக்கின்றன. \\begin {align} 3RCONH_2 + P_2O_5 &\\rightarrow 3RCN + 2H_3PO_4 \\\\ RCH = NOH + (CH_3CO)_2O &\\rightarrow RCN + 2CH_3COOH \\end {align} பெருமளவில் நைட்ரைல்கள் தயாரிக்கப் பட கரிம அமிலங்கள்,அம்மோனியாவுடன் வினைப் படுத்தப் படுகின்றன. நீர் மூலக் கூறை அகற்றும் வினை வேக மாற்றியும், உயர் அழுத்தமும் இதற்குத் தேவை. இடை நிலைச் சேர்மமாக அமில அமைடு உருவாகும். RCOOH + NH_3 \\rightarrow {RCONH_2} \\rightarrow RCN நெகிழித் தயாரிப்பில், பயன் படுத்தப் படும் அக்ரிலோ நைட்ரைல் என்னும் சேர்மம் புரோப்பிலீனுடன் அம்மோனியாவையும், ஆக்சிஜனையும் வினைப் படுத்துவதால் கிடைக்கிறது. CH_3CH = CH_2 + NH_3 + \\frac{3}{2}O_2 \\rightarrow H_2C = CHCN + 3H_2O அக்ரிலோ சேர்ம மூலக் கூறுகளை மின் வேதி முறையில், வாலுடன் வால் பிணைப்பை ஏற்படுத்தி, ஹைட்ரோடைமர் அடிபோ நைட்ரைல் என்னும் இணைப்புக் கூறை உருவாக்குகின்றனர். இதை, ஆதாரமாகக் கொண்டே நைலான்–6.6 என்னும் செயற்கை இழை உருவாக்கப் படுகிறது. 2CH_2 = CHCN \\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{\\mathrel{\\stackrel{\\scriptscriptstyle \\mathrm{2a^-{\\rightarrow{ \\scriptscriptstyle 2H^+NC(CH_2)_4CN —ருத்ர. துளசிதாஸ்"}}