{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zp3k2vyw/", "data": {"id": "zp3k2vyw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zp3k2vyw/", "kind": "word", "headword": "பகழிக்கூத்தர்", "romanization": "pakaḻikkūttar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:04.870131+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் இராமநாதபுரத்தில் சன்னியாசி என்னும் கிராமத்தில் வைணவ சமயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு வயிற்று நோய் கண்டு, அதன் பொருட்டுத் தம் குலத்துக்குரிய தெய்வங்கட்குப் பிரார்த்தனை பலவும் செய்தும் தீராது துன்பப்பட்டவர். பின்னர்த் திருச்செந்தூர் முருகப் பெருமானைப் பாடித் தம் வயிற்று நோயினின்றும் நீங்கியவர். இவரது அன்புக்கு உகந்த செந்தில் வேலவன் தன் திருவாபரணங்களுள் ஒன்றையும் வழங்கியுள்ளான். இவர் பாடிய நூல் திருச்செந்தூர் முருகர் பிள்ளைத்தமிழ் என்பது. கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 607"}]}}