{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zednpc4f/", "data": {"id": "zednpc4f", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zednpc4f/", "kind": "word", "headword": "துண்மித் தொகுதி இடமாற்றம்", "romanization": "tuṇmit tokuti iṭamāṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:52.742906+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைகலைத் திரைக்காட்சியிலும், இயங்கு படங்களிலும் செவ்வகத் தொகுதி யாய் அமைந்த படப்புள்ளிகளின் பண்பியல்புகளை மாற்றவும், கையாளவும் பயன்படும் ஒரு நிரலாக்கத் தொழில்நுட்பம். பட உருவம் ஒரு சிறிய சுட்டுக்குறி (cursor) யாகவோ, ஒரு கார்ட்டூன் படமாகவோ இருக்கலாம். இத்தகைய துண்மித் தொகுதியை ஒற்றை அலகாக ஒளிக்காட்சி நினைவகத்தில் நகர்த்துவதன் மூலம் கணினித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிவேகமாய் திரையிட முடியும். துண்மிகளின் மதிப்புகளை மாற்றுவதன் மூலம் உருவப்படங்களில் ஒளிப் பகுதியை மாற்றமுடியும். தொடர்ச்சியாக அடுத்தடுத்துத் திரையிடுவதன் மூலம் பட உருவங்களின் தோற்றத்தை மாற்ற முடியும். நடமாடுவது போலச் செய்யவும் முடியும்.", "needs_definition": false, "gloss_en": "bit block transfer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 156"}]}}