{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z9w35muw/", "data": {"id": "z9w35muw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z9w35muw/", "kind": "word", "headword": "சுத்த தத்துவம்", "romanization": "cutta tattuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:17.545877+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தோற்றம் சுத்த மாயையிலிருந்து சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுவரம், சுத்த வித்தை என ஐந்து தத்துவங்கள் முறையே ஒன்றிலிருந்து ஒன்றாய்த் தோன்றும். இவற்றின் காரியமே சுத்த பிரபஞ்சம் வேறுபெயர் சிவதத்துவம் ஆற்றல்; மறைப்பாற்றல் உலகத்தைச் செயற்படுத்தும் பொழுது விழைவாற்றல், அறிவாற்றல், வினையாற்றல் எனப் பெரும்பான்மை மூன்றாக நிற்கும் அவற்றுள் விழைவாற்றல் ஒரு நிலையிலேயே இருக்கும். ஏனைய இரண்டான அறிவாற்றல், வினையாற்றல் ஆகியவை தனித் தனியேயும் மிக்கும் குறைந்தும் செயற்படும். இது இயல்பே இந்நிலையில் செயற்படும் தத்துவங்கள் பின்வருமாறு. வகை; 1) சத்தி; ஆற்றல். வினையாற்றல் மட்டும் செயற்பட நிற்குங்கால் இறைவனே சத்தி எனப் பெயர் பெறுவான். அதனால், அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சத்தி தத்துவம் எனப்படும். இதனையே விந்து தத்துவம் என்றுங்கூறுவர். 2) சாதாக்கியம் அறிவும் வினையும் சமமாகச் செயற்பட்டு நிற்குங்கால் இறைவன் சதாசிவன் எனப் பெயர் பெறுகிறான். அதனால் அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சதாசிவ தத்துவம் அல்லது சாதாக்கிய தத்துவம் என்று பெயர் பெறும். 3) ஈசுவரன்; அறிவு குறைந்து வினைமிகுந்து செயற்பட நிற்குங்கால், இறைவன் மமீசுரன் எனப் பெயர் பெறுவான். அதனால் அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் ஈசுரத் தத்துவம் எனப்படும். 4) சுத்த வித்தை; வினை குறைந்து அறிவு மிகுந்து செயற்பட்டு நிற்குங்கால், இறைவன் வித்தியேசுரன் எனப்பெயர் பெறுவான். அதனால், அவனுக்கு, இடமாகின்ற தத்துவமும் வித்தை எனப்பெயர் பெறும். அசுத்தி மாயா தத்துவத்திலும் ஒரு தத்துவம் வித்தை எனப்படுவதால் இது சுத்த வித்தை என்றே கூறப்பெறும். 5) சிவம்; அறிவாற்றல் மட்டும் செயற்பட நிற்குங்கால், இறைவன் சிவன் எனப்படுவான். அதனால், அவனுக்கு இடமாகின்ற தத்துவமும் சிவதத்துவம் எனப்படும். இதனையே நாத தத்துவம் என்றுங்கூறுவர்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 133"}]}}