{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z7p24vhz/", "data": {"id": "z7p24vhz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z7p24vhz/", "kind": "article", "headword": "ஆமெசான்", "romanization": "āmecāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.986468+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆமெசான் பண்டைக் காலத்தில் ஆசியா மைனர் நாட்டிலுள்ள தெர்மோடன் ஆற்றின் கரையில் வசித்த வீரமகளிர் சாதியாகும்.", "body_ta": "ஆமெசான் பண்டைக் காலத்தில் ஆசியா மைனர் நாட்டிலுள்ள தெர்மோடன் ஆற்றின் கரையில் வசித்த வீரமகளிர் சாதியாகும். அவர்கள் வில்லையும் அம்பையும் உபயோகிப்பதற்கு அனுகூலமாக இருக்கத் தங்கள் வலது தனத்தைத் தீய்த்து விடுவார்களாம். தாங்கள் சிறையாக்கும் ஆண்களைத் தங்கள் அடிமைகளாக வைத்து நடத்துவார்களாம். இது கிரேக்கர் புராணங்கள் கூறுவது."}}