{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yyds4fk9/", "data": {"id": "yyds4fk9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yyds4fk9/", "kind": "word", "headword": "காரைக்கால் அம்மையார்", "romanization": "kāraikkāl ammaiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:03.446669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவருக்குப் புனிதவதியார் என்ற பெயரும் உண்டு. காரைக்காற் பதியில் நிதிபதி செட்டியார் திருமகளார். நாகை பரமதத்தனுக்கு வாழ்க்கைப்பட்டவர். இறைவன் திருவருளால் பேய் வடிவினை வேண்டிப் பெற்றவர். திருவாலங்காட்டில் முத்தியடைந்தவர். இவர் பாடியன அற்புதத் திருவந்தாதி, மூத்த திருப்பதிகம், இரட்டைமணிமாலை என்பன. இவை பதினோராம் திருமுறையில் சேர்க்கப் பட்டிருக்கின்றன. காலம் கி.பி.6 நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 580"}, {"n": 2, "definition_ta": "வணிகர், காரைக்கால் சோழ நாடு, சிவபத்தர். இறையருளால் மாங்கனி பெற்றவர். 10 ஆம் திருமுறையில் மூன்று நூல்கள் செய்து அருளியவர். அவையாவன: திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள் (2) திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி. சங்கம வழிபாடு (63).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 100"}]}}