{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ysayw3jr/", "data": {"id": "ysayw3jr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ysayw3jr/", "kind": "article", "headword": "நைசீரியா கோனோரியா", "romanization": "naicīriyā kōṉōriyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:03.908100+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வெட்டை நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி நைசீரியா கோனோரியா (Neisseria gonorrhoeae) எனப் படும்.", "body_ta": "வெட்டை நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி நைசீரியா கோனோரியா (Neisseria gonorrhoeae) எனப் படும். கோனோகாக்கஸ் எனப் படும், இந் நுண்ணுயிரிரைக் கிராம் எதிர், இரு கோள நெய்சர் நுண்ணுயிரி எனவும் கூறுலாம். இது நீள் வட்டமாக இணையாக இருக்கும். இதன் எதிரெதிர்ப் பரப்புகள் தட்டையாகவோ, குழி விழுந்தோ இருக்கும். கிராம் எதிராகவும், வளி விரும்பியாகவும் இருக்கும். இது ஓர் ஒட்டுண்ணியாக இருப்பதால், ஓர் ஓம்புயிரிலிருந்து, பிறிதோர் ஓம்புயிருக்கு நேரடியாகப் பரவுகிறது. இந்நுண்ணுயிரியைக் கிராம் சாயம் ஏற்றல் மூலமாகவும், சாக்லேட் அகாரில் வளர்ச்சியடையச் செய்வதன் மூலமும் கண்டு பிடிக்கலாம். —அ. கதிரேசன் துணை நூல். PN. Laha, Text book of Medicine, Vol–I, Third Edition, API, Bombay, 1979."}}