{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ym9t53kz/", "data": {"id": "ym9t53kz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ym9t53kz/", "kind": "article", "headword": "ஆட்டோ, நிக்கலஸ் ஆகஸ்ட்", "romanization": "āṭṭō, nikkalas ākasṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.846203+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆட்டோ, நிக்கலஸ் ஆகஸ்ட் (Otto, Nikolous August 1832-1891): ஜெர்மானியப் பொறியியல் அறிஞர்.", "body_ta": "ஆட்டோ, நிக்கலஸ் ஆகஸ்ட் (Otto, Nikolous August 1832-1891): ஜெர்மானியப் பொறியியல் அறிஞர். இவர் நேசா நகரின் அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பிறந்தவர். பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர் வியாபாரியானார். ஆனால் அப்போது கண்டுபிடிக்கப்பட்ட உள்ளெரி எஞ்சின் (த. க.) இவரது கருத்தைக் கவர்ந்ததால் இவர் இதுபற்றிய ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். அதன் விளைவாக 1876-ல் நாலடி எஞ்சினை (Four- Stroke Engine) இவர் கண்டுபிடித்தார். இது இன்னும் இவர் பெயரால் வழங்குகிறது. அக்காலத்தில் பாரிஸ் நகரில் நடந்த சர்வதேசக் கண்காட்சியில் இவருடைய எஞ்சினுக்குத் தங்கப் பதக்கம் பரிசளிக்கப்பட்டது."}}