{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ykkjkp68/", "data": {"id": "ykkjkp68", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ykkjkp68/", "kind": "article", "headword": "நைட்ரைட்", "romanization": "naiṭraiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.028429+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நைட்ரஜன் டை ஆக்சைடு என்னும் எதிரயனியைக் (NO₂) கொண்ட சேர்மங்கள் நைட்ரைட்டுகள் எனப் படுகின்றன.", "body_ta": "நைட்ரஜன் டை ஆக்சைடு என்னும் எதிரயனியைக் (NO₂) கொண்ட சேர்மங்கள் நைட்ரைட்டுகள் எனப் படுகின்றன. இவை நைட்ரஸ் அமிலம் (HNO₂) என்னும் நிலைத் தன்மையில்லா அமிலத்திலிருந்து பெறப் படுபவை. இச்சேர்மங்களில் நைட்ரஜனின் ஆக்சினேற்ற நிலை 3+ ஆக உள்ளமையால், இவ்வயனி ஆக்சிஜனேற்றக் காரணியாகவும், ஆக்சிஜன் ஒடுக்கக் காரணியாகவும் அமைகிறது. பெரும்பாலான நைட்ரைட்டுகள் ஓரளவு நிலைத்தவை. இச்சேர்மங்கள் சாயப் பொருள் உற்பத்தியிலும், கரிம வேதித் தொகுப்புகளிலும் பயனாகின்றன. நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றைச் சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுள் செலுத்துவதால், சோடியம் நைட்ரைட் உண்டாகிறது. இவ்வினை பின் வருமாறு: NO + NO_2 + 2NaOH \\rightleftharpoons 2NaNO_2 + H_2O வீரிய மிகு அமிலங்களை நைட்ரைட் கரைசலுடன் சேர்ப்பதால், இவ்வினையின் மீள்வினை நிகழ்கிறது. இதனால், வளிமக் கலவையும், நைட்ரேட்டும் உண்டாகின்றன. Fe(NO)2+ என்னும் பழுப்பு நிற அணைவு அயனியைக் கொண்ட கரைசல் உருவாதல் மூலம் இதனைப் பண்பறியலாம். —த. தெய்வீகன்"}}