{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yjvk2kgq/", "data": {"id": "yjvk2kgq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yjvk2kgq/", "kind": "article", "headword": "ஆரராட்", "romanization": "ārarāṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.807685+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Ararat) ஈரானுக்கும் துருக்கிக்குமிடையிலுள்ள ஓர் எரிமலை.", "body_ta": "(Ararat) ஈரானுக்கும் துருக்கிக்குமிடையிலுள்ள ஓர் எரிமலை. இங்குத்தான் பிரளயத்துக்குப்பின் நோவாவின் தோணி தங்கியதாகக் கிறிஸ்தவ வேதம் கூறும். மலையின் உயர்ந்த சிகரம் கடல் மட்டத்திற்குமேல் 17 ஆயிரம் அடியாம். கடைசியாக 1840 ஆம் ஆண்டில் இவ்வெரிமலை நெருப்பைக் கக்கியபோது உயிருக்கும் பொருளுக்கும் மிகுந்த சேதம் விளைந்தது."}}