{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yjd9zpfa/", "data": {"id": "yjd9zpfa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yjd9zpfa/", "kind": "article", "headword": "இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை", "romanization": "iliṅkaṉ ācareṭcuki iyakka mutirccic cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.871235+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை என்பது குழந்தைகளுக்கான உளவியல் சோதனைகளுள் ஒன்றாகும்.", "body_ta": "இலிங்கன் ஆசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை என்பது குழந்தைகளுக்கான உளவியல் சோதனைகளுள் ஒன்றாகும். இச்சோதனை 1923-ஆம் ஆண்டு உருசியாவில் அமைக்கப்பட்டது. இது எல்லா வயதுக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படக் கூடிய முறையில் அமைக்கப்பட்டது. இது பற்றிய கருத்து பிற ஐரோப்பிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இச்சோதனை மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குப் (Mentally Retarded Children) பெரும்பாலும் பயன்படுத்தப்படும் முறையில் மாற்றியமைக்கப்பட்டது. பேச்சுக் கோளாறுகள், இயக்கக் குறைவுடைமை (Motor Retardation) வேறு வகைகளான மூளை வளர்ச்சி குன்றிய நிலைகள் ஆகியவற்றையுடைய குழந்தைகளுக்கு ஏற்றவாறும் இச்சோதனை திருத்தியமைக்கப்பட்டது.\n\nஇச்சோதனையில் பல பகுதிகள் அடங்கியுள்ளன. சோதனைக் கருவிகளும் விரிவாக அமைக்கப்பட்ட பொருள்களைக் கொண்டிராமல் சிறுகுச்சிகள், கட்டைகள், காகிதம், கயிறு, பெட்டிகள், பந்து போன்ற பொருள்களைக் கொண்டுள்ளன. இச்சோதனையின் திருத்தம் 1955–ஆம் ஆண்டு இலிங்கன் அசரெட்சுகி இயக்க முதிர்ச்சிச் சோதனை (Lincoln Oseretsky Moter Development Scale) என்னும் பெயரில் வெளியிடப்பட்டது. இச்சோதனையில் குழந்தைகளின் சமூக முதிர்ச்சியும் (Social Maturity) மதிப்பீடு செய்யப்படுவதற்கான பகுதிகள் அடங்கியுள்ளன."}}