{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ygewqzhm/", "data": {"id": "ygewqzhm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ygewqzhm/", "kind": "word", "headword": "வட்டு வழங்கன்", "romanization": "vaṭṭu vaḻaṅkaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:21.591794+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறும் பரப்புப் பிணையத்தில், பயனாளர்கள் பகிர்ந்து கொள்வதற்கான வட்டினைக் கொண்ட ஒரு கணுக் கணினி. இது கோப்புப் வழங்கனிலிருந்து (Fie Server) மாறுபட்டது. கோப்பு வழங்கன் பயனாளர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை ஏற்றுக் கோப்புகளை வழங்கும். மிகவும் நுட்பமான மேலாண்மைப் பணிகளையும் மேற்கொள்ளும். ஆனால் வட்டு வழங்கன் மேலாண்மைப் பணி எதுவும் செய்வதில்லை. வெறுமனே ஒரு தரவு சேமிப்பகமாகச் செயல்படும். பயனாளர்கள் வட்டு வழங்கனிலுள்ள கோப்பு களைப் படிக்கலாம்/எழுதலாம். வட்டு வழங்கனிலுள்ள வட்டினைப் பல்வேறு தொகுதி (Volume) களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு தொகுதியும் ஒரு தனிவட்டுப் போலவே செயல்படும்", "needs_definition": false, "gloss_en": "disk server", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வட்டு வழங்கன் கணினி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 459"}]}}