{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/yb7uvr5r/", "data": {"id": "yb7uvr5r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yb7uvr5r/", "kind": "word", "headword": "வெப்பம் பரவும் முறைகள்", "romanization": "veppam paravum muṟaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:40.057730+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்பம் பின்வரும் மூன்று முறைகளில் பரவுகின்றது. 1. கடத்தல் கண்டக்ஷன்): ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் வழியாக வெப்பம் செல்லுதல். இதில் இம்மிகள் இடம் பெயர்வதில்லை. இஃது உலோகங்களில் நடைபெறுவது. தாவீது காப்புவிளக்கு வெப்பக் குடுவை ஆகியவை இதன் அடிப்படையில் அமைந்தவை. 2. சுழற்சி (கன்வெக்ஷன்) இதில் ஒரு பொருளின் ஒரு பகுதியிலிருந்து அதன் மற்றொரு பகுதிக்கு இம்மிகள் சுழற்சியால் வெப்பம் செல்கிறது. மரத்துள் கலந்த நீரை வெப்பப்படுத்த, மேலுள்ள தூள் கீழும் கிழுள்ள தூள் மேலும் செல்லும், அடர்த்தி குறைந்த இம்மிகள் மேல்வர, அடர்த்தி அதிகமுள்ள இம்மிகள் கீழ்ச் செல்லும். இதை மரத்துாள் சுழற்சி நன்கு விளக்குகிறது. இது நீர்மங்களிலும் வளிகளில் மட்டும் நடைபெறுவது. வெற்றிடத்தில் நடைபெறாது. இதனடிப்படையில் காற்றோட்டமும் நீரோட்டமும் ஏற்படுதல். 3. கதிர்வீசல் (ரேடியேஷன்) இதில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடைப்பொருள் சூடடையாமல் வெப்பம் செல்லுகிறது. எ-டு குளிர்காயும் பொழுது உடலில் வெப்பம் உறைத்தல், கதிரவனிடமிருந்து நிலவுலகு வெப்பம் பெறுதல். இது வெற்றிடத்திலும் நடைபெறுவது. இம்முன்று முறைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு வெப்பக்குடுவை", "needs_definition": false, "gloss_en": "heat, methods of propagation", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 198"}]}}