{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/xhxkxupw/", "data": {"id": "xhxkxupw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/xhxkxupw/", "kind": "article", "headword": "உகந்த அளவு மக்கள்தொகை", "romanization": "ukanta aḷavu makkaḷtokai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.842913+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது ஒரு நாட்டிற்குரிய தனித்தன்மையினை மையமாகக் கொண்டு, அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும் இயற்கைச் செல்வங்களைப் பயனுடையதாக மாற்றத் தேவைப்படும் தரமான மக்கள்தொகை வரையறையைக் குறிக்கும்.", "body_ta": "இது ஒரு நாட்டிற்குரிய தனித்தன்மையினை மையமாகக் கொண்டு, அதன் பொருளாதார முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிகோலும் இயற்கைச் செல்வங்களைப் பயனுடையதாக மாற்றத் தேவைப்படும் தரமான மக்கள்தொகை வரையறையைக் குறிக்கும். இயற்கைச் செல்வங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் மக்கள் தொகைவளர்ச்சி மிகையாயிருந்தால் பொருளாதார\n\nபடம்–2 முற்றுரிமை நிறுவனம்\n\nவளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும். அதுவே வாழ்க்கைத் தரத்தையும் தனியாள் வருமானத்தையும் பாதித்து முதலீடு, உற்பத்தி, வேலைவாய்ப்பு, நுகர்வு ஆகியவற்றைக் குறைத்துவிடுகிறது. எனவே, மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவுகள் யாவை? அதை எதற்காக, எப்பொழுது கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய உகந்த அளவு மக்கள்தொகைக் (Optimum Population) கோட்பாடு உதவுகிறது.\n\nமக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக் கோட்பாட்டினர் உலகம் ஏற்கெனவே நெருக்கடியாக உள்ளதெனக் கருதுகின்றனர். இப்போது ஆண்டொன்றுக்கு 0.4 விழுக்காட்டில் பெருகி வரும் உலக மக்கள் தொகை 175 ஆண்டுகளில் இருமடங்காகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றில் மக்கள்தொகையின் வளர்ச்சி வீதம் இதைவிடவும் மிகையாக உள்ளது. மக்கள்தொகைப் பெருக்கத்தினால் உணவு, உடை, உறைவிடம் போன்ற பொருள்களின் பங்கீட்டில் தனியாளுக்குக் கிடைக்கும் பங்கு காலப்போக்கில் குறையும். இது நாட்டின் உற்பத்தி வளர்ச்சியைச் சார்ந்திருக்கும். ஒரு நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி முறையையும் உற்பத்திப் பொருள்களின் வளர்ச்சி முறையையும் அறிய அந்நாட்டு வருமானத்தையும் மொத்த உற்பத்தியையும் மக்கள் தொகை அளவோடு ஒப்பிட்டுப் பகுத்தாய வேண்டும்.\n\nமக்கள்தொகையின் வளர்ச்சிமுறையை விளக்க அளவையியல் (Logistic), காம்பர்ட்சு (Gompertz) போன்ற வளைகோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இம்முறை மால்தசுவின் (Malthus) கோட்பாட்டுடன் தொடர்புடையது. வரைபடத்தில் காட்டியுள்ளவாறு நாட்டில் உள்ள இயற்கை வளங்களைப் பொறுத்து, மக்கள்தொகை வளர்ச்சி K என்ற உகந்த அளவை எட்டிய பின்னர், அதிலேயே நிலைத்து நிற்கும் சூழ்நிலை இயல்பாக உருவாகும். இதன்படி மக்கள்தொகை வளர்ச்சி தொடர்ச்சியாகப் பெருகிக் கொண்டே செல்லாது. அது உகந்த அளவை அடைந்த பின்னர் அதிலேயே நிலைத்து நிற்கும். இதைப் பின்வரும் வரைபடம் விளக்குகிறது.\n\nமக்கள்தொகை இந்த உகந்த அளவை அடைவதற்குத் தேவையான இடைப்பட்ட கட்டுமானக் காலத்தில் (Gestation Period) தனியாள் வருமானம் மக்கள்தொகை வளர்ச்சியால் பாதிக்கப்படலாம். மால்தசு மக்களிடையே தீய பழக்கங்கள் வளர்ச்சியடைவதற்கு மக்கள்தொகைப் பெருக்கமே காரணம் என்றார். அவருடைய கூற்றுப்படி வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் வளர்வீதத்தில் (Arithmetic Progression) 1, 2, 3, 4, 5, 6, .... எனவும், மக்கள்தொகை பெருக்கல் வீதத்தில் (Geometric Progression) 1, 2, 4, 8, 16 எனவும் வளர்ச்சியுறுவதால் மக்கள் வீதத்தைவிட உணவு 1:1, 2:2, 3:4, 4:8 எனக் குறைந்துகொண்டே செல்லும். பற்றாக்குறை காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டுப் போர்களும் இயற்கையின் சீற்றங்களான வெள்ளம், வறட்சி போன்றவையும் கொடிய பஞ்சமும் உருவாகும். பற்றாக்குறையைத் தீர்க்கத் தொழில்நுட்ப வளர்ச்சி உதவும் என்பதில் மால்தசு நம்பிக்கை வைக்கவில்லை.\n\nவளர்ச்சியுற்ற நாடுகளில் தொழில் வளர்ச்சியின் காரணமாகத் தேவைப் பொருள்களின் உற்பத்தி மிகையாவதால், வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, பெற்றோர்கள் குடும்பத்தைக் கட்டுப்படுத்தத் தூண்டப்படுகின்றனர் என்பது அந்நாட்டு வரலாறுகளிலிருந்து அறியப்படுகிறது. மேலும், மால்தசு கருதுவது போல மக்கள்தொகைப் பெருக்கம் எல்லாச் சூழ்நிலையிலும் தீமை தருவதில்லை. ஏனெனில், மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவு உண்ண வாய்மட்டுமன்றி உழைப்பதற்கு இரு கைகளும் கூடவே தோன்றுகின்றன. எனவே, மக்கள் நுகர்வோராக மட்டுமன்றி உற்பத்தியாளராகவும் இருக்கின்றனர் என்பது தெளிவு.\n\nமக்கள்தொகைக் குறைவும் மிகையான மக்கள் தொகையைப் போலத் தீமை பயக்கும். போதுமான அளவு உழைப்பாளர் கிடைக்காவிடில் இயற்கை வளங்களைப் பயன்படுத்த இயலாது. ஆக்கத்தேவை இல்லாத காரணத்தால் வேலை பகுப்பினால் உருவாகும் சிக்கனங்களைப் பயன்படுத்த இயலாது. ஒரு நாட்டின் நிலம் வளம் பொருந்தியதாகவும் நிலத்தடி பெருமளவில் கனிப்பொருள்கள் அடங்கியதாகவும் இருந்தாலும், போதுமான மக்கள்தொகை இல்லாவிடில் அவை மதிப்பின்றிப் பயனற்றுப் போகும். இவற்றைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கவும் நுகரவும் உழைப்பு இன்றியமையாதது. எனவே, மக்கள்தொகை அளவு உற்பத்திக் காரணிப் பொருள்களின் அளவைச் சார்ந்துள்ளது.\n\nஎட்வின் கானன் (Edwin Cannon) என்பவரின் கூற்றுப்படி உகந்த அளவு மக்கள் தொகை நாட்டு உற்பத்தியோடு தொடர்புடையதேயன்றி, உணவு உற்பத்தியை மட்டுமே சார்ந்ததன்று. எனவே, தொடக்க காலத்தில் மக்கள்தொகைப் பெருக்கத்தினால் மிகையாகும் உழைப்பின் அளிப்பு நாட்டு வருமானம் பெருகும் வீதத்தில் பெருகக் காரணமாக அமைகிறது. அதனால், தனியாள் வருமானமும்\n\n(மக்கள்தொகை) || ||மிகுந்துகொண்டே செல்லும்.\n\nகுறிப்பிட்ட மக்கள் தொகை உச்ச அளவு தனியாள் வருமானத்தைத் தரும். அதன் பின்னர், பெருகும் மக்கள்தொகை நாட்டு வருமானத்தைச் சிறிதளவே உயர்த்துவதால் தனியாள் வருமானம் குறையத் தொடங்கும். பொருளியல் அறிஞர் தால்டன் (Dalton) உகந்த அளவு மக்கள்தொகையைப் (O) பின்னணியாக வைத்து, குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் நிலவும் மக்கள்தொகையின் (Actual Population) (A) தன்மையை M = \\frac{(A - O)}{O}என்பதன் மூலமாக அளவிடுகிறார். M என்பது நேர்மறை எண் (+) ஆக இருந்தால் அது அதிக மக்கள்தொகை என்றும், எதிர்மறை எண் (—) ஆக இருந்தால் குறைந்த மக்கள் தொகை என்னும் பொருள்படும். இதன் மூலம் மக்கள் தொகையைப் பெருக்கவோ குறைக்கவோ தேவையான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த உகந்த அளவு மக்கள்தொகைக் கோட்பாடு தொழிலறிவு மாறுபடும்பொழுது உகந்த அளவும் மாறுபடும் என்பதை வலியுறுத்துகிறது. இதனை அளவிடுதல் நடைமுறையில் எளிதன்று.\n\nஉகந்த அளவு மக்கள்தொகை அதனோடு தொடர்பான பிற காரணிகளின் உச்ச அளவினையும் குறிக்கும். வருவாய் சார்ந்த உகந்த அளவு வட்டிவீதம், முதலீட்டால் வருவாயில் தோன்றும் மாற்றம் ஆகியவற்றைப் பொறுத்திருக்கும். நலம் சார்ந்த உகந்த அளவு பிற காரணிகளுடன் நலத் தொடர்பையும் (Welfare Function) சார்ந்திருக்கும். நிலவும் மக்கள்தொகை உகந்த அளவிலிருந்து மாறுபட்டிருப்பதைப் பல்வேறு குறியீட்டெண் (Index) காரணிகள் மூலம் கணக்கிட இயலும். அவை தனியாள் வருவாய், பன்னாட்டு வாணிக நிலை, வேலையின்மை ஆகியன. உழைப்பு, உற்பத்தி ஆகிய குறியீட்டெண்கன் மக்கள்தொகைப் பெருக்கத்தால் தொழில்களில் ஏற்படும் தாக்கங்களைக் கூறுகின்றன.\n\nபிளாக்கர் (Blacker) என்பவர் மக்கள்தொகை வளர்ச்சியில் நிலவும் ஐந்து நிலைகளைக் கூறுகிறார். மக்கள்தொகை வளர்ச்சி வீதம் பிறப்பு வீதத்திற்கும் இறப்பு வீதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடாகும். தொடக்ககாலத்தில் இவ்விரு வீதங்களும் மிகையாக உள்ளதால் வளர்ச்சி வீதம் மாறாமலிருக்கிறது. அதன் பின்னர், இறப்பு வீதம் மட்டும் குறைவதால் மக்கள் தொகைப் பெருக்க வீதம் மிகுதியாக இருக்கும். அதற்கடுத்த நிலையில், பிறப்பு வீதம் குறைவதால் மக்கள் தொகை நிலையாக இருக்கும். நகரிய வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், பெண்கள் வேலைக்குச் செல்லுதல் போன்றவற்றால் பிறப்பு வீதம் இறப்பு வீதத்தைவிடக் குறையும். இதனால், மக்கள் தொகை குறையத் தொடங்கும். இத்தகைய பின்னணியில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் சமூக, பொருளியல் காரணிகள் வலிமை பெறும். இதே காரணங்களினால் இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 1901–இல் 0.7–ஆக இருந்து, 1951–இல் 1.33 ஆக மாற்றமடைந்து, 1981–இல் 2.5 ஆக உயர்ந்துள்ளது.\n\nஇக்காலத்தில் நாடுகள் உகந்த அளவு மக்கள் தொகையை அடைவது மட்டுமே சிறந்த நோக்கமெனக் கருதவில்லை; மக்கள்தொகையில் சீர்கேடு உருவாகாமல் தடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன. மக்கள்தொகை 1 விழுக்காடு பெருகினால் அது ஆண்டு வருமானத்தில் 3 முதல் 5 விழுக்காட்டை விழுங்கிவிடும். எனவே, தனியாள் வருவாய் உயர்வது 0.5 முதல் 1 விழுக்காடு வரை தடை செய்யப்படுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவில் பெருகினால் வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதை ஊக்கப்படுத்துதல், உற்பத்திக் காரணிகளைப் பெருக்குதல், உழைப்பின் தேவையைப் பெருக்குதல் ஆகிய திட்டங்களைச் செயற்படுத்த முயல்கின்றனர். கீன்சின் (J.M. Keynes) கூற்றுப்படி மக்கள்தொகை வளர்ச்சி வீத உயர்வில் முழுநேர வேலையின்மை மட்டுமன்றிச் சுழலும் வேலையின்மையும் (Cyclical Unemployment) பெருகும்.\n\nஇந்தியா உலக நாடுகளின் மக்கள்தொகையில் இரண்டாம் இடத்தையும் நில அளவில் ஏழாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியா உலக நாடுகளின் மக்கள்தொகையில் 15 விழுக்காட்டையும் நிலப்பரப்பில் 2.4 விழுக்காட்டையும் உலக வருமானத்தில் 1.5 விழுக்காட்டையும் கொண்டுள்ளது. மொத்த மக்கள்தொகை 700 மிலியனையும் விட மிகையாக உள்ளது. நாடுகளின் வருமானத்திற்கும் மக்கள்தொகை வளர்ச்சி வீதத்திற்கும் தொடர்பு இல்லை என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. குறைந்த வருவாய் நாடுகள் 2.3 விழுக்காட்டு வளர்ச்சி வீதத்தையும், செல்வம் மிக்க நாடுகள் 4.3 விழுக்காட்டு மக்கள்தொகை வளர்ச்சி வீதத்தையும் கொண்டுள்ளன. எனவே, மக்கள்தொகைப் பெருக்கம் உகந்த அளவு மக்கள்தொகையிலிருந்து வேறுபட்டிருந்தால் அதனைச் சமன் செய்ய வேண்டும். என்.மா.\n\nதுணை நூல்கள்\n\nBernard, P, Haley, A Survey of Contemporary Economics, Richard D. Irwin Inc., Illionis, 1960.\n\nGeorge Soule, Economics – Measurement Theories, Core Studies, Rinehart and Winston Incorporation, New York, 1961. Roger Leroy Miller, Economics Today–The Micro, Harper and Row Publishers, New York, 1974."}}