{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wzw9wuvs/", "data": {"id": "wzw9wuvs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wzw9wuvs/", "kind": "article", "headword": "இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம்", "romanization": "intiyat tēciya viññāṉac caṅkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:30.213925+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம் (National Institute of Science of India) விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கும், அவ்வறிவைத் தேசியப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் 1935-ல் நிறுவப்பட்டு,1945-ல் அரசாங்கத்தின் மதிப்புப் பெற்றுள்ளது.", "body_ta": "இந்தியத் தேசிய விஞ்ஞானச் சங்கம் (National Institute of Science of India) விஞ்ஞான அறிவை வளர்ப்பதற்கும், அவ்வறிவைத் தேசியப் பிரச்சினைகளுக்குப் பயன்படுத்துவதற்கும் 1935-ல் நிறுவப்பட்டு,1945-ல் அரசாங்கத்தின் மதிப்புப் பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு விஞ்ஞானப் பிரச்சினைகள் பற்றி ஆலோசனைகள் கூறும் நிலையமாக இருந்து வருகிறது. இதில் சிறந்த விஞ்ஞானிகள் உறுப்பினராக இருக்கிறார்கள். அயல்நாட்டு விஞ்ஞானப் பெரியார்கள் சிலர் கெளரவ உறுப்பினராக இருக்கிறார்கள். இச்சங்கம் இரண்டு இதழ்கள் வெளியிடுகின்றது."}}