{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wua7s4ck/", "data": {"id": "wua7s4ck", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wua7s4ck/", "kind": "article", "headword": "அல்டாமிசுக் கல்லறை", "romanization": "alṭāmicuk kallaṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.095105+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தில்லியில் குதுப் மசூதிக்கு வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.", "body_ta": "தில்லியில் குதுப் மசூதிக்கு வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. தில்லியை ஆண்ட சுல்தானிய மரபுகளுள் ஒன்றான அடிமை மரபு அரசர்களுள் ஒருவர் அல்டாமிசு (கி.பி. 1211–1236). இவர் தாம் இறக்கும் முன்னர் இந்த இடத்தைத் தெரிந்தெடுத்தார். இவ்வழகுமிக்க கல்லறையை இவர் மகள் இரசியா கட்டினார். இந்தியாவில் இன்று வரை நிலைத்துள்ள தொன்மையான கல்லறைகளுள் இதுவும் ஒன்று. இக்கல்லறையின் நுட்பமான சிற்பப் பணி வியக்கத்தக்கது. காண்க: இல்துத்மிசு."}}