{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wprfb56v/", "data": {"id": "wprfb56v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wprfb56v/", "kind": "article", "headword": "அசென்சன் தீவு", "romanization": "aceṉcaṉ tīvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.257608+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தென் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் எலீனா தீவுக்கு வடமேற்கே 1100 கி.மீ.", "body_ta": "தென் அட்லாண்டிக் பெருங்கடலில் செயின்ட் எலீனா தீவுக்கு வடமேற்கே 1100 கி.மீ. தொலைவில் உள்ளது. உலக நடுக்கோட்டிற்கு 800 கி.மீ. தெற்கே இத்தீவு அமைந்துள்ளது. பிரிட்டனுக்குச் சொந்தமான இதன் நிருவாகத்தைச் செயின்ட் எலீனா கவனித்து வருகிறது. இதன் பரப்பளவு 88 ச.கி.மீ.; மக்கள் தொகை 1200. ஆமைகளும் கரிய நிறக் கடற்பறவைகளும் இத்தீவில் பெருகி வளர்கின்றன.\n\nஅசென்சன் தீவு"}}