{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wkdmwkks/", "data": {"id": "wkdmwkks", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wkdmwkks/", "kind": "word", "headword": "ஸ்ரீலஸ்ரீ குன்றக்குடி அடிகளார்", "romanization": "srīlasrī kuṉṟakkuṭi aṭikaḷār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.877192+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் வித்துவான் பட்டம் பெற்ற சைவத் துறவியார். நல்ல பேச்சாளர். சீர்திருத்தக் கருத்துக் கொண்டவர். தேவார திருவாசக, திருவாய்மொழிகளின் மூலம் தேவாலயங்களில் அர்ச்சனை நடைபெற வேண்டுமென்ற கருத்துக் கொண்டவர். அக் கருத்தை எங்கும் பரப்பி வருபவர். இராமநாதபுரத்தைச் சார்ந்த குன்றக்குடித் திருமடத்துக்குத் தலைவர். மலேயா, சிங்கப்பூர் முதலான இடங்கட்குச் சென்று இந்துமத சார்பான சொற்பொழிவுகளை நடத்தியவர். பிற மதத்தர்கள் செய்வது போல பிற மதத்தினரையும் சேரியில் உள்ளவர்களையும் சீர்திருத்தி இந்து மதத்தில் சேர்த்து மதத்தை வளம்படுத்த வேண்டுமென்ற எண்ணங் கொண்டு உழைப்பவர். இவர் அவ்வப்போது பேசிய பேச்சுக்கள் அச்சு வடிவில் வந்துள்ளன. அவற்றுள் ஒன்று தமிழ்இசைச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகித்தபோது பேசிய தலைமைப் பேச்சு அடங்கிய நூலாகும். கி.பி.20 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 631"}]}}