{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wj3rg6rs/", "data": {"id": "wj3rg6rs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wj3rg6rs/", "kind": "article", "headword": "ஆபிரகாம்", "romanization": "āpirakām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:25.737478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "எபிரேய சாதியை ஏற்படுத்தியவர்; அதன் முதல் தலைவர்.", "body_ta": "எபிரேய சாதியை ஏற்படுத்தியவர்; அதன் முதல் தலைவர். ஊர் (Ur) என்னும் நகரத்தில் பிறந்து கடவுள் ஆணைப்படி கானான் நாட்டுக்கு வந்து குடியேறினார். அவருடைய பக்தியைச் சோதிக்க அவருடைய மகனைப் பலியிடுமாறு கடவுள் பணிக்க, ஆபிரகாம் அவ்வாறே செய்யப்போகும்போது கடவுள் மகனுக்குப் பதில் ஆட்டை நிறுத்தினார். ஆபிரகாம் பற்றிய கதைகள் விவிலிய வேதநூலில் காணப்படும். ஆபிரகாமின் ஒரு மகனான இஷ்மேல் சில அரபு இனத்தார்க்கு மூதாதை. மற்றொரு மகனான ஈசாக்கு இஸ்ரவேல் வகுப்பினரின் மூதாதை."}}