{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wfwtgvyj/", "data": {"id": "wfwtgvyj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfwtgvyj/", "kind": "article", "headword": "அவிநாசிநாத சாமிகள்", "romanization": "avinācināta cāmikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.953885+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "திருக்கோவலூர் ஞானியார் மடாலயத்தின் முதல் தலைவர்.", "body_ta": "திருக்கோவலூர் ஞானியார் மடாலயத்தின் முதல் தலைவர். இவர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் கொங்குவள நாட்டில் உள்ள அந்தியூரில் பிறந்தார். இளமையில் ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சாமிகளிடம் இலக்கிய இலக்கணங்களையும் சைவ சித்தாந்த நூல்களையும் கற்றுத் தெளிவடைந்தார். இவரது உள்ளம் துறவறம் மேற்கொள்ள விழைந்ததால், அன்பர் ஒருவர் தாம்பிரவேணியில் அமைத்துக் கொடுத்த திருமடத்தில் தங்கினார். இவர் நடராசப் பெருமான் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தில்லை சென்றார்; அங்குச் சிலகாலம் தங்கினார். அவிநாசிநாத சாமிகள் தில்லையில் தங்கியிருந்த போது வேதபுரி என்னும் ஊரிலிருந்து தில்லைக்கு வந்திருந்த சிற்றம்பலத்தார் என்பவர், இவரைத் தம்முடன் வருமாறு அழைக்கவே, அவருடன் சென்று விட்டார். பின்னர்த் திருக்கோவலூர் சென்றார். அங்கு மெய்யறிவாசிரியரை வழிபட்டுச் சிவ சின்னம் அணியப் பெற்றார். திருக்கோவலூர் ஞானியார் மடாலயத்தின் முதல் தலைவராக விளங்கினார். இவர் அறிதுயில் நிலையை (யோக நிலை) நன்கு பழகியவர் என்றும், அந்நிலையிலேயே பன்னாள் இருந்தார் என்றும் கூறுவர்.\n\nஅவிநாசிநாத சாமிகள் நெஞ்சுவிடு தூது, சிகாமணிப் பதிகம், அபிடேக மாலை, அட்டகம், மங்களம் முதலிய நூல்களை இயற்றியருளினார். நெஞ்சு விடுதூது 300–க்கும் மேற்பட்ட கண்ணிகளைக் கொண்டு விளங்குகிறது. சிகாமணிப் பதிகம் பத்துப் பாடல்களையும், அபிடேகமாலை பதினொரு பாடல்களையும் கொண்டவை. அட்டகம் எட்டுச் செய்யுள்களால் ஆனது. மங்களம் இசைப் பாடலால் ஆனது.மு.த."}}