{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wfups6s2/", "data": {"id": "wfups6s2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wfups6s2/", "kind": "article", "headword": "ஆரவல்லி மலை", "romanization": "āravalli malai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.831480+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராசபுதனத்தின் வழியே வட கிழக்காக முந்நூறு மைல் நீளம் கிடக்கும் மலைத் தொடராகும்.", "body_ta": "இராசபுதனத்தின் வழியே வட கிழக்காக முந்நூறு மைல் நீளம் கிடக்கும் மலைத் தொடராகும். தென்மேற்குக் கோடியிலுள்ள ஆபு மிக உயரமான சிகரம் (5650 அடி). ரோஜா நிறமான படிகக்கல் அதிகமாயிருப்பதால் சிகரங்கள் கண்ணைப் பறிக்கின்றன. இம்மலைப் பிரதேசத்தில் மக்கள் தொகை குறைவு. மரங்களும் அதிகமில்லை. மலைத்தொடரின் இடைப்பட்ட நிலங்கள் பெரும்பாலும் பாலைவனங்கள். நீர்மிகுந்த இடங்களில் ஊர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று அஜ்மீர் நகரம்."}}