{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wec6n5t2/", "data": {"id": "wec6n5t2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wec6n5t2/", "kind": "article", "headword": "இளையான்குடிச் செப்பேடு", "romanization": "iḷaiyāṉkuṭic ceppēṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.420936+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளையான் குடியில் தமிழ்நாடு தொல்பொருள் துறையினர் கண்டெடுத்த செப்பேடாகும்.", "body_ta": "இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இளையான் குடியில் தமிழ்நாடு தொல்பொருள் துறையினர் கண்டெடுத்த செப்பேடாகும். இச்செப்பேடு இவ்வூரிலுன்ன இராச பட்டர் என்பவரிடமிருந்து பெறப்பட்டது. இச்செப்பேடு 11.3 அங்குல நீளமும் 6.9 அங்குல அகலமும் உடையது. விசயரகுநாத பெரிய உடையார் தேவர் என்பவர் இச்செப்பேட்டைக் கைலாச நம்பியார் மகன் சுப்பிரமணிய தம்பியாருக்கு கி.பி. 1733–இல் வழங்கினார். திருக்கை நாட்டு இந்திரா அவதார நல்லூரான இளையான்குடியில் உள்ள இராசேந்திர சோழீசுவரர் கோயிலிலும், மனம் மகிழீசுவரர் கோயிலிலும் பூசனையும் நைவேத்தியமும் செய்வதற்குத் திருவுடையாபுரம் என்னும் ஊரினைக் கொடையாகச் சுப்பிரமணிய நம்பியாருக்கு வழங்கியதைத் குறிப்பதே இச்செப்பேடு. இச்செப்பேட்டில் இவ்வூர் ‘துகவூர்க் கூற்றத்தில் காடர் திருக்கை நாட்டில் இந்திராவதார நல்லூரான இளையான்குடி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வூரிலுள்ள கல்வெட்டுகளோ இதனை ‘வடவல்லத் திருக்கை இளையான்குடியான இந்திராவதார நல்லூர்’ என்று குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டினைக் கொண்டு விசய ரகுநாத உடையார் ஈழ நாட்டையும் கொங்கு நாட்டையும் இசுலாமியரையும் வென்ற, சேதுவம்சத்தைச் சேர்ந்தவர் என்பதனை அறியலாம். ம.இரா.த."}}