{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/w7bzfxsw/", "data": {"id": "w7bzfxsw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/w7bzfxsw/", "kind": "article", "headword": "அருவாளர்", "romanization": "aruvāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:21.589887+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அருவாளர் கொள்ளிடத்தின் வடக்கேயுள்ள அருவாநாட்டிலும் (தென்னார்க்காடு மாவட்டம்) அருவாவடதலை நாட்டிலும் (செங்கற்பட்டு மாவட்டம்) இருந்த பழங் குடிகள்.", "body_ta": "அருவாளர் கொள்ளிடத்தின் வடக்கேயுள்ள அருவாநாட்டிலும் (தென்னார்க்காடு மாவட்டம்) அருவாவடதலை நாட்டிலும் (செங்கற்பட்டு மாவட்டம்) இருந்த பழங் குடிகள். இவர்களை அகத்தியர் வடநாட்டிலிருந்து கொண்டுவந்து இங்கே குடியேற்றியதாகத் தொல்காப்பியப் பாயிரம் கூறும். இவர்களைக் கரிகாலன் வென்று இங்கே சோழராச்சியத்தை அமைத்தான் என்பர்."}}